பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

251

உண்மை நிலை என்ன? பெருமானார் அவர்கள் மக்காவைப் பிடித்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற நாடு பிடிக்கும் ஆசையில் மக்கா மீது படையெடுக்கவோ அல்லது படை நடத்தவோ இல்லை என்பதுதான் உண்மை வரலாறு.

ஹுதைபியாவில் ஒரு உடன்படிக்கை அண்ணாலாருக்கும் மக்கா குறைஷிகளுக்குமிடையே ஏற்படுகிறது. அந்த உடன்படிக்கை மக்கா குறைஷிகளுக்கு சாதகமாகவும் பெருமானார் (சல்) அவர்கட்கு மிகப் பெரும் பாதகமாகவும் அமைந்த ஒருசார்பான உடன்படிக்கை. இருப்பினும் உலகில் சாந்தியையும் சமாதானத்தையும் நிலை நிறுத்தும் வகையில் அந்த உடன்படிக்கையை ஏற்கிறார் அண்ணலார். இம்மண்ணுலகில் இறை நெறியை நிலைநிறுத்தவும், மக்களிடையே சாந்தியையும் சமாதானத்தையும் நிலை நிறுத்தவும் முஸ்லிம்கள் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயங்கக் கூடாது என்பதை உலகினர்க்கு உணர்த்தவுமே குறைஷிகள் விதித்த அத்தனை நிபந்தனைகளையும் ஏற்றார் ஏந்தல் நபி (சல்) அவர்கள்.

அப்பாலைப் பகுதியில் பல்வேறு இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பனீகுளாஅ என்பது ஒரு சின்னஞ்சிறு இனம். அவர்களும் குறைஷிகளைப் போன்று உருவ வழிபாடு நடத்தும் வழக்கத்தினர். அவர்களும் முஸ்லிம் களுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் சம்பந்தப்படுகிறார்கள்.

குறைஷிகள் பனீகுளாஅ வகுப்பினர்க்கு பெருந் தொல்லையும் துயரமும் தருகிறார்கள். இரு சாராரும் விக்கிரக வழிபாடு செய்பவர்களாக இருந்தபோதிலும் மிகச் சிறுபான்மையினர் என்பதனாலும் முஸ்லிம்களுக்கு எல்லா வகையிலும் உதவி வருவதாலும் குறைஷிகள் பனீகுளாஅ வகுப்பினரைத் தொடர்ந்து தொல்லைகளுக்காளாக்கி வந்ததை பெருமானார் கண்டித்து குறைஷிகளுக்குக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தை அலட்சியப்படுத்திய மக்கா குறைஷிகள் பனீகுளாஅ மக்களுக்குத் தொடர்ந்து துன்பம்