பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவுபெறும். அங்கே ஆன்ம வெளிச்சம் வெளிப்பட இறையுணர்வு பொங்கிப் பொழியும். இதுவே இறை நெருக்கம் பெற நமக்கு வாய்க்கும் ராஜபாட்டை.

இவ்வாறு மாசு மறுவற்றதாக உள்ளத்தை செம்மையாக வைத்து, உள்ளொளி பெருக்கி இறை நெருக்கம் பெறுதலே ஆன்மீக நோக்கம் என்பர் மெய்ஞ்ஞானியர்.

எனவே, மனதில் எழக்கூடிய தீய உணர்வுகள், தீய எண்ணங்கள், தீய சிந்தனைகள் அத்தனையையும் மனத்திலிருந்து துடைத்தெறிந்து விட்டு, உள்ளத்தைத் தெள்ளத் தெளிவான பளிங்கு போல் ஆக்கிக் கொள்வதற்கான முயற்சியிலே ஈடுபட்டால், இறையருள் பொங்கும் இடமாக உள்ளம் மாறினால் இறை நெருக்கம் பெறுதல் மிக எளிதாகும்.

இதே கருத்தை இன்னும் தெளிவாகப் புரிந்துணரும் வகையில் மெய்ஞ்ஞான மேதை குணங்குடி மஸ்தான் ஒரு பொருள் பொதிந்த காட்சியை நம்முன் படம் பிடித்துக்காட்டி தெளிவுபடுத்துகிறார்.

வேட்டை நாயா, வெறி நாயா?

காட்டுக்கு வேட்டையாடச் செல்கிறவர் தனக்குத் துணையாக ஒரு வேட்டை நாயையும் கைக்கொண்டு செல்வார். வேட்டையின் போது ஏதாவது முயல் கைக்குக் கிடைக்காமல் ஓடும் போது, முயல் பிடிக்க ஓடும் வேட்டைக்காரனுக்கு முன்னால் அவனைவிட வேகமாகப் பாய்ந்து சென்று வேட்டைப் பொருளான முயலைக் கவ்வி பிடித்துவந்து வேட்டைக்காரனிடம் சேர்ப்பிக்கும். இது வேட்டை நாய்க்குண்டான குணம். அதே சமயம் வேட்டைக்குச் செல்கின்றவர் வேட்டை நாயைக் கொண்டு செல்லாது, வேட்டை நாய் என்கிற பெயரில் வெறி நாயைக் கைக்கொண்டு சென்றால், அது வேட்டைப் பொருளை தேடிச்