பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

மானாலும் பிரச்சினையானாலும் அதனை சைன்டிஃபிக் அப்ரோச் (Scientific Approach) கொடுத்து ஆயும் மனப்போக்கு. அறிவியல் அணுகு முறையும் அறிவியல் கண்ணோட்டமும் இன்றைய மேலோட்ட வாழ்வில் நீக்கமற நிறைந்துள்ள பெரும் பண்பாகும். பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடமும் இதே மனப் போக்குத்தான் இன்று வளர்ந்து வளம் பெற்று வருகிறது. அறிவியல் கோணத்திலிருந்து பார்த்தால்தான் எதுவுமே புரிகிற - நம்புகிற மனநிலை.

ஆனால், அத்தகைய அறிவியல் கண்ணோட்ட உணர்வு நம்மிடத்திலே இருக்கிறதா என்றால் 'இல்லை' என்றே கூற வேண்டிய நிலை. இன்னும் சொல்லப்போனால் நாம் இன்னும் அந்த உணர்வுக்கே ஆட்படவில்லை என்றுதான் வேதனையோடு குறிப்பிட வேண்டியுள்ளது.

இந்தச் சமயத்தில் நான் ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

அண்மையில் என் நண்பர் மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்களை அமெரிக்காவில் வாஷிங்டன் நகருக்கு அருகில் உள்ள பால்டிமோரில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவரைப் பற்றி உங்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆதாம் (அலை) தொடங்கி 1975 வரை உலகத்தில் பிறந்த மாமனிதர்களில் தங்களின் தனித்த செல்வாக்கினால் உலகத்தின் வரலாறையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தவர்களில் நூறு பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்குள்ளும் முதலாமவர் யார், இரண்டாமவர் யார் என அவர்களை வரிசைப்படுத்தி, 'Ranking of the most influential persons in the History "The 100" என்ற தலைப்பில் நூல் எழுதிய உலகப் புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியர். அந்த நூலில் நூறு உலக மாமேதைகளில் அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு முதலிடம் தந்த பேராய்வாளர். அவரை - அவரது