பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை


உங்கள் கரங்களில் தவழும் இந்நூல் 1998ஆம் ஆண்டு துபாய் உட்பட வளைகுடா நாடுகளில் நடைபெற்ற மீலாது விழாக்களில் நான் ஆற்றிய சொற்பொழிவுகளின் சுருக்கமாகும். இந்த அரிய வாய்ப்பை நான் பெறக் காரணமாயமைந்தவர் சமுதாயச் சேவைச் செம்மல் தாவூத் பாட்சா அவர்களும் ஈமான் பேரவையின் செயலாளராக அரும்பணியாற்றிவரும் அருமை நண்பர். அல்ஹாஜ் எம்.அப்துர் ரஹ்மான் சாஹிப் அவர்களும் மற்றும் ஈமான் அமைப்பினரும் ஆவர்.

வளைகுடா மீலாது கூட்டங்கள் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விழாக்களில் கலந்து கொண்டவர்களும் பேரார்வமிக்கவர்களாக இருந்ததால் அவர்களோடு சேர்ந்து நாயகத் திருமேனியின் வாழ்வையும் வாக்கையும் அடியொற்றி, திருமறை ஒளியில் இஸ்லாத்தைப் பற்றி சற்று உரக்க சிந்திக்க முடிந்தது. இச்சிந்தனைகள் காற்றோடு போய்விடாமல் எழுத்து வடிவில் தமிழ்கூறு நல்லுலகெங்கும் செல்ல வேண்டுமென நண்பர்கள் கருத்து வெளியிட அதற்கு ஈமான் அமைப்பின் ஆற்றல்மிகு செயலாளர் அல்ஹாஜ் எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் உருக்கொடுக்க ஈமான் பேரமைப்பின் ஆதரவோடு இன்று நூல் வடிவில் என் பொழிவுகளின் சுருக்கம் உங்கள் பார்வையில்.

பெருமானாரின் பெரு வாழ்வும் அவர் உலகுக்குரைத்துச் சென்ற வாக்கும் திருமறையின் அதியற்புதச் செய்திகளும் இன்றைய அறிவுலகை முனைப்புடன் சிந்திக்கச் செய்துள்ளன. இஸ்லாத்தை வழக்கமான ஆன்மீகக் கண்ணோட்டத்தோடு மட்டுமல்லாது, இன்றைய வாழ்வின் இன்றியமையா பேரங்கமாக உருவெடுத்துள்ள அறிவியல்