பக்கம்:ஈட்டி முனை.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
29

Řx/ 5. இதய ஒலி வெங்கொடுமைச் சாக்காட்டில் விளேயாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம் ! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்! (பாரதிதாசன்) இலக்கியம் எல்லோருக்கும் பொது என்று கூறு கிற சிலரை பழமை விரும்பிகள் பரிகசிக்கிருர்கள். மக்களின் ஏழ்மையை, சிறுமைகளே. துயரை மனித சமுதாயத்திலே பின்னிக் கிடக்கிற சூழ்ச்சி களே, அனேத்தையுமே இலக்கியத்திலே உணர்ச்சி கரமாகப் பதித்து படிப்போரின் அக க் கண் க ளே விழிப்புறச் செய்து, அவர்களைச் சிந்திக்கும்படி துண்ட் வேணும் என்று சொல்கிறவர்களை பித்தர் கள் எனச் கிரிக்கிருர்கள் பேதைகள்! வாழ்வின் கிர்வானத் தன்மையை அம்பலமாக்கி அதன் கோரங்களேக்கண்டு கண்கூசும்படி, அவற்றை வெறுத்து சீருறுத்தும் உணர்வு பெறும்படி மக்களேத் துண்ட வேண்டும் இலக்கியம் என்று சொல்லும் போது இலக்கிய சனதனிகள் சீறுகிருர்கள். இலக்கிய மறுமலர்ச்சி தேவை என்று சொல்லு பவர்களைக் கண்டு கரித்துக்கொட்டுகிருர்கள் பலர். மறுமலர்ச்சி என்று சொல்லிக்கொண்டு மடமையைப் போற்றுகிருர்கள் கனவுக்குத் தாளம் போட்டு புராணத்தைக் கட்டியழ விரும்புகிற பிற்போக்குக் கும்பல்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/31&oldid=1023158" இருந்து மீள்விக்கப்பட்டது