பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

ஈரோடு மாவட்ட வரலாறு


பாதுகாப்பின் பொருட்டு விசயமங்கலம் சமணக் கோமிலுக்குக் கொண்டு வந்து விட்டனர். தமிழக அரசின் பழஞ்சுவடி நூலகத்தில் அரசண்ணா மலை கூஷ்மாண்டினி இயக்கியைப் புகழ்ந்து ஒரு பாடல் உள்ளது. 'அரசண்ணாமலை அதிசயாமலை' என அப்பாடல் கூறுகிறது.

அரசண்ணாமலை அடிவாரத்தில் கொங்கம்பாளையத்தில் உள்ள கொங்கு வேளாளர்கள் மலைமேல் "அரசாத்தாள்" இருப்பதாகக் கூறுகின்றனர். பெண்களுக்கு அரசாத்தாள் என்று பெயர் வைக்கின்றனர். இது சமண இயக்கியின் பெயராகும்.

கொங்க தேச ராசாக்கள் நூலில் கங்கமன்னர்கள் ஆதரவு பெற்ற 'அரிஷ்டணன்' என்ற சமணப் பெரியார் குறிக்கப் பெறுகிறார். 'அரிஷ் டணன் மலை' அரசண்ணாமலை ஆகியிருக்கலாம். தீர்த்தங்கரர்கள் எல்லோரும் அரசர்களே. அதனாலும் 'அரசண்ணல்மலை' அரசண் ணாமலை ஆகியிருக்கலாம்.

அறச்சலூர் மலையில் சமண முனிவர் கல்படுக்கைகளும் தமிழ் பிராமி கல்வெட்டும் உள்ளது. ஈரெட்டி மலையில் ஒரு துறவியின் நிளைவுக்கல் கிடைத்துள்ளது.

கொங்கு நாட்டில் இன்றும் நல்ல நிலையில் உள்ள சமணக் கோயில்கள் 6 உள்ளன. அவற்றில் ஐந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ளன என்பது சிறப்புக்குரியது.

சீனாபுரம்

பெருந்துறையிலிருந்து திங்களூர் செல்லும் வழியில் ஏழாவது கிலோ மீட்டரில் உள்ள மமுட்டித்தோப்பு என்ற இடத்தில் முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதர் (பகவான் ரிஷபதேவர்) கோயில் உள்ளது.

நன்னூலாசிரியர் பவணந்தி முனிவர் வாழ்ந்து வழிபட்ட கோயில், 70 ஆண்டுகளுக்கு முன்பு விசயமங்கலம் சமணர் சூரய்யர் வந்து வழிபாடியற்றியதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலுக்கு நமிட்டிபாளை யத்தில் 27.67 ஏக்கரும், தலையம்பாளையத்தில் 22 ஏக்கரும் மானிய பூமி உள்ளது எனக் கூறுகிறார்கள்.