பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

ஈரோடு மாவட்ட வரலாறு


விஜயதசமி விழாவன்று "சொட்டை முனை ஆயுதம் பட்டத்துவாள்" இவைகளை அரண்மனையிலுள்ள சண்டிகாதேவி கோயிலுக்கு வந்து எடுத்து விளையாடும் உரிமை அவ்வூர் இசுலாமியருக்கு உரியதாக உள்ளது.

ஐதர் அலி 1778ஆம் ஆண்டு பழையகோட்டை 22ஆம் பட்டக்காரர் நல்லசேனாபதிச் சர்க்கரை உத்தமக்காமிண்ட மன்றாடியாரை தாராபுரத்தில் சிறை வைத்தார். 1783ஆம் வருடம் திப்பு அவரை விடுதலை செய்து பட்டாபிஷேகம் செய்வித்தார் .இதனை

“சகாப்தம் 1704 சுபகிருது வருஷம் என்னையும்
  என்னைச் சேர்ந்த சனங்களையும் விடுதலை பண்ணி
  காரையூடுக்கு வந்து சேர்ந்திருக்கும் நாளையிலே டிபு
  சுலுதான் பகதூரவர்கள் காரியத்தில் கர்த்தராகிய
  கபூர் சாயபு அவர்கள் நாளையில் நாடனைவரும்
  கூடிவந்து எனக்குப் பட்டாபிஷேகம் பண்ணி நல்ல
  சேனாபதிச் சர்க்கரை உத்தமக்காமிண்ட மன்றாடி
  என்னப்பட்ட பேரை வெளங்கப்பண்ணினார்கள்”

என சர்க்கரை மன்றாடியார் வம்சாவளி கூறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பல மகுதிகளும் (இறைஇல்லம்), பல தர்காக்களும் (ஞானாசிரியர் அடக்கத் தலம்) உள்ளன. வ.உ.சி. பூங்காவில் பசல்சா காதிரு அவுலியா தர்காவும், ஈதுகா பள்ளியும் உள்ளது. இவற்றை ஐதர் அலி பார்வையிட்டு நிலக்கொடை அளித் துள்ளார்.

அல்அமீன் சேவை மற்றும் கொடைக் கழகத்தாரால் ஒரு மெட்ரிக் குலேசன் பள்ளியும் பாலிடெக்னிக்கும் நடைபெறுகிறது. பிராமணப் பெரிய அக்கிரகாரத்தில் மதரசா தாவூதியா அரபிக்கல்லூரி வள்ளல் அல்ஹாஜ் ஏ.பி. ஷேக்தாவூது சாகிப் அவர்களால் 1952ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது 25.12.1951ஆம் ஆண்டு 11 மாணவர்களைக் கொண்டு அல்லாமா அமானி அச்ரத் அவர்கள் ஆலோசனைப்படி தொடங்கப்பட்டது.