பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

127


போடப்பட்டது. கரூர்கற்கள், பாளையங்கோட்டை தொழிற்கல்விக் கூடத்தில் செய்யப்பட்ட கதவு. சாளரங்களால் கட்டப்பட்டது. ஆலயப்பணி நடைபெறும் போது பிரப் அவர்கள் மனைவி ரோஸ்ட்டா ஜேன் பிரப் அம்மையார் 1929ஆம் ஆண்டு காலமானார். அவர் கல்லறை இங்கு உள்ளது.

இஸ்லாமியக் கட்டடப் பணியில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் 'கடவுள் ஒருவரே' என்று தமிழிலும், அரபு மொழியிலும் (யா குதா) எழுதப்பட்டுள்ளது.

ஈரோட்டில் தூய பேதுருவின் ஆலயம், தூய யோவான் ஆலயம் ஆகியவை உள்ளன. கொடுமுடி, பெருந்தலையூர், பவானி, சிவகிரி, பட்டக்காரன்பாளையம், காஞ்சிக்கோயில், வெள்ளோடு, பூந்துறை, கோபிச்செட்டிப்பாளையம் முதலிய பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன.

லுத்தரன் சபை ஆலயங்கள்

1888இல் தமிழ் சுவிசேச லுத்தான் உயிர்த்தெழுந்த நாதர் ஆலயம் ஈரோட்டில் கட்டப்பட்டது. ஊத்துக்குளி, புஞ்சைப்புளியம்பட்டி போன்ற ஊர்களிலும் ஆலயங்கள் உள்ளன.

சிலோன் இந்தியா பொதுச்சங்கசபை ஆலயங்கள்

கோபிச்செட்டிப்பாளையத்தில் ஒரு பழமையான ஆலயம் உள்ளது. குறிச்சி, அந்தியூர், ஆப்பக்கூடல், சத்தியமங்கலம் ஆகிய ஊர்களில் கோபுரங்கள் இல்லாத ஆலயங்கள் உள்ளன. இவை அனைத்தும் சுமார் 100 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

பெந்த கொஸ்தே ஆலயங்கள்

பெந்த கொஸ்தே சபையினர் பெரிய தேவாலயங்கள் கட்டாமல் வீடுகளிலும் கொட்டகைகளிலும் சிறிய ஆலயங்களிலும் வழிபாடு நடத்துகின்றனர்.