பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

23. தொல் எழுத்து ஆவணங்கள்


அ) கல்வெட்டுக்களும் செப்பேடுகளும்

ஒரு நாட்டின் வரலாற்றை எழுத மிக முக்கிய சான்றுகளாக இருப்பவை கல்வெட்டுக்களும் செப்பேடுகளுமாகும். அவை இரண்டும் ஈரோடு மாவட்டத்தில் பல கிடைத்துள்ளன.

கல்வெட்டுக்கள்

கல்லில் வெட்டப்பட்ட எழுத்துக்களைக் கல்வெட்டுக்கள் என்று கூறுகிறோம். அவை கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் ஈரோடு மாவட்டப் பகுதியில் கிடைக்கின்றன. சுமார் 600 கல்வெட்டுக்கள் இம்மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. மைய அரசு தொல்லியல்துறைக் கல்வெட்டுப் பிரிவினரும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் ஈரோடு கொங்கு ஆய்வு மையத்தினரும். ஈரோடு அருங்காட்சியினரும் படியெடுத்துள்ளனர்.

தமிழ்-பிராமிக் கல்வெட்டுக்கள்

ஈரோடு வட்டம் அறச்சலூர் மலையின் வட சரிவில் உள்ள பாறைத் தொடரின் மேற்புறம் ஆண்டிபாறை எனப்படும் இயற்கைக் குகைத்தளத்தில் உள்ள சமண முனிவர்களின் கற்படுக்கை அருகே தாளஇசை அடைவு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மணிய வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பவன் அந்த இசை எழுத்துக்களைச் சேர்த்ததாக அக்கல்வெட்டுக் கூறுகிறது.

'எழுத்தும் புணருத்தான் மணிய
வண்ணக்கன் தேவன் சாத்தன்

என்பது கல்வெட்டாகும். ஏகாரத்திலிருந்து எகரக்குறிலாக ஒலிக்கப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எகரம் புள்ளிபெறும் என்பதற்கு இக்கல் வெட்டு ஒன்றே சான்றாரும். இசைக்கும் தொல்காப்பிய விதிக்கும், தமிழ்பிராமியிலிருந்து வட்டெழுத்து வரிவடிவத் தோற்றத்திற்கும்