பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ஈரோடு மாவட்ட வரலாறு


இம்மாவட்டத்தின் வடக்கு மேற்கு எல்லைகளிலேயே உள்ளன, படையோடு வந்தவர்களும் அவர்களின் வருகையைத் தடுத்தவர்களும் நடத்திய பல்வேறு கடுமையான பெரும் போர்களினால் ஏற்பட்ட அழிவையும் கொள்ளையடிக்கப்பட்ட பெருஞ்செல்வ இழப்பையும் பெரும் துன்பத்தையும் ஈரோடு மாவட்டமே தாங்கியது.

3000 வீடுகளைக் கொண்டு முக்கிய வணிக மைய ஊரான ஈரோடு முற்றிலும் அழிக்கப்பட்டு ஆள்நடமாட்டம் இல்லாத 400 இடிந்த வீடுகளைக் கொண்டிருந்தது 1792ல்! அழிவிற்கு இது ஒரு சான்று.

மெல்ல மெல்ல உயிர் பெற்று இன்று நிமிர்ந்து வீறுநடை போடுகிறது ஈரோடு மாவட்டம், அணுகுண்டு வெடிப்பிற்குப் பின் ஜப்பான் எழுச்சி பெற்றதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

ஈரோடு மாவட்டம் கிழக்கே சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களையும், தெற்கே திண்டுக்கல் மாவட்டத்தையும், மேற்கே கோயமுத்தூர், உதகமண்டலம் மாவட்டங்களையும், வடக்கே கருநாடக மாநிலத்தையும் எல்லைகளாகக் கொண்டு விளங்குகிறது.

8192 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஈரோடு மாவட்டம் கிழக்குத் தீர்க்க ரேகை 76-49' முதல் 77-5' வரையும் வடக்கு அட்சரேகை 10-36′ முதல் 11-58' வரையும் உள்ள பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 25,74,067 பேர் ஆவர். ஆடவர் 1308039 பேர்; பெண்டிர் 1268028 பேர். பெண்கள் தொகை சற்றுக் குறைவு. கல்வியறிவு உடையோர் 69.5 சதவிகிதம். மாநில சதவிகிதத்தை விடக்குறைவு, சதுர கிலோ மீட்டருக்கு 314 பேர் வாழ்வதாகப் புள்ளி விவரம் கூறுகிறது (2001).

ஈரோடு, தாராபுரம், கோபிசெட்டிபாளையம் என்ற மூன்று வருவாய்க் கோட்டங்களையும், ஈரோடு, தாராபுரம், காங்கயம், பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய ஏழு வருவாய் வட்டங்களையும், இருபது ஊராட்சி ஒன்றியங்களையும் நாற்பத்தேழு வட்டாரங்களையும் (பிர்க்கா). ஐநூற்று முப்பத்தொன்பது