பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

ஈரோடு மாவட்ட வரலாறு


தாராபுரம், காங்கயம் வட்டத்தில் கிடைக்கிறது. அவை சுண்ணாம்பு தயாரிக்கப்பயன்படுகிறது. (ஆற்றுப்படுகைகளில் கிடைக்கும் கிளிஞ்சல் மூலமாகவும் சுண்ணாம்பு தயாரிக்கப்படுகிறது). கருநீலம், இளம் பச்சை, ஆகிய இரு நிறங்களில் 'காக்காப்பொன்" (Mica) கிடைக்கிறது. பவானி வட்டம் வைர மங்கலம், ஏற்றப்ப நாயக்கன் பாளையத்தில் பெரிய அளவிலும் மற்ற இடங்களில் சிறு அளவிலும் காக்கர்ப்பொன் கிடைக்கிறது.

பவானி, பெருந்துறை வட்டங்களில் கல்நார் கிடைக்கிறது. ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம் ஆகிய வட்டங்களில் வெங்கச்சங்கல் என்னும் வெண்கல் (Quarts) கிடைக்கிறது.

மெருகூட்டுதல்

வண்ணக்கற்களை மெருகூட்டி (பட்டை தீட்டுதல்) மணிகள் செய்வதில் காங்கயம் பகுதியில் சுமார் 150 பேர் ஈடுபட்டுள்ளனர். வணிகர்கள் அவற்றை வாங்கி ஜெய்ப்பூருக்கு அனுப்புகின்றனர். அங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. வடிவம், வண்ணம், நேர்த்தியைப் பொறுத்து ஒரு கேரட் 100 ரூ முதல் 1000 ரூ வரையில் விற்கப்படுகிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் முயற்சியால் 'இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி' உதவியுடன் “ஆலோசனை மற்றும் பணிகள் மையம்" மூன்று சுய உதவிக்குழுக்களை அமைத்துத் தொழிலாளர்களே ஏற்றுமதியாளர்களாக இன்று மாறியுள்ளனர்.