பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

157


அடி எனப்பட்டது. பல இடங்களில் அளவு முறைகள் மாறுபட்டுள்ளன. கொடை கொடுக்கும் போது ஏற்கனவேயுள்ளவர்கள் சொந்த நிலம், மானிய நிலம் இவை நீக்கி மிகத் துல்லியமாக அளந்து எல்லைக்கல் நாட்டிக் கொடுக்கப்பட்டது.

ஏற்கனவேயுள்ள பாசனத்திட்டங்கள் சரியாக நடக்காவிட்டால் பது முறைகள் புருத்தப்பட்டன. காங்கயம் அகிலாண்டபுரம் கல்வெட்டில்

"செங்குளம் வண்ணான் வாவி ஆண்டிச்சிகுட்டை இந்த மூன்று குளத்தில் தண்ணீரும் கொண்டு வந்து பெரிய வாவியிலே விழுவிடுவித்து பெரிய வாவியில் தண்ணீர் பரந்த நீரோடு நிலம்" என்று கூறப்படுகிறது.

அணை, ஏரி, குளத்தின் மதகுகள் 'வாய்' எனப்பட்டது. வாயிலிருந்து கால்வழியாக நீர் வருவதால் அது 'வாய்க்கால்' எனப்பட்டது. வாய்க்கால் நீர் திருப்பும் மடை 'கண்ணாறு' எனவும் அழைக்கப்பட்டது. குறுவாய்க்கால்கள் வதி எனப்பட்டன.

காடு அழித்து நாடார்கிய நிலங்கள் 'மண்ணறை' எனப்பட்டன. கார், பசானம் என இரு விளைவு காலங்கள் (போகம்) கூறப்பட்டுள்ளன.

ஒரு போகம் விளையும் நிலம் 'ஒருபூ நிலம்' என்றும், இரு போகம் விளையும் நிலம் 'இருபூ நிலம்' என்றும் கூறப்பட்டது. சில இடத்தில் மூன்றால் போகம் விளைந்தால் அது 'கடைப்பூ" என்று கூறப்பட்டது.

பயிர் ஏறின (விளைந்த) நிலத்திலேதான் வரி வாங்கப்பட்டது.

'வெள்ளச்சாவி', 'வறச்சாவி', 'நாற்றுப்பாழ்', 'நட்டுப்பாழ்', ஆன நிலத்திற்கு வரி நீக்கப்பட்டது. அல்லது குறைக்கப்பட்டது. புவனேசுவரி என்னும் ஆய்வாளர் " கொங்கு நாட்டில் தனியாக எவருக்கும் சொந்தமாக நிலம் இல்லை, எல்லா நிலங்களும் அரசனுக்கே சொந்தமாக இருந்தது" என்று கூறியுள்ளார். ஆனால் கொடை நிலங்களின் எல்லை கூறும் போது, பலருக்கு உரிமையான நிலம் கூறப்பட்டுள்ளது. அவை விற்கவும் தானங்கொடுக்கவும் ஒற்றிவைக்கவும் சீதனம் கொடுக்கவும் உரிமையுடைய நிலங்கள் என்று கூறப்பட்டுள்ளன.