பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

ஈரோடு மாவட்ட வரலாறு


ஆமணக்கு, சூரியகாந்தி, தேங்காய் போன்ற எண்ணெய் வித்துக்களும் வாழையில் பூவன், ரஸ்தாளி, மொந்தன், நேந்திரம், தேன்வாழை, செவ்வாழை, கதலி, ஜி9, பச்சை நாடன், பச்சைப்பழம், ரொபஸ்டா போன்றவை பயிரிடப்படுகின்றன. கொய்யா, மா, மாதுளை, திராட்சை, சப்போட்டா, எலுமிச்சை, சீதா, பப்பாளி போன்ற பழவகைகளும், புளி, வெங்காயம், நெல்லி, காய்கறிகள், மூலிகை வகைகள், மலர் வகைகள், பட்டுக்கூடு தயாரிக்க மல்பெரி ஆகியனவும் பயிரிடப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் எக்டேரில் விவசாயம் நடைபெறுகிறது.