பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

167


கொண்டு மத்திய அரசு ஜூலை முதல் தேதி இதற்கு அனுமதி வழங்கியது.

ஐரோப்பிய நாடுகளிலும் சீனாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வரும் நாடா இல்லாத விசைத்தறிகளைப் பயன்படுத்தும் கூடங்கள் இங்கு அமைக்கப்படும். நெசவுடன். ஆயத்த ஆடை தயாரிப்பு, சைசிங், வார்ப்பிங் போன்ற ஜவுளித்துணைத் தொழில்களும் இங்கு தொடங்கப்படும். கட்டமைப்பு வசதிகளுக்கும் தொழில் கூடங்களுக்கும் 40 சதவீதம் மைய அரசும் மாநில அரசும் மானியம் வழங்குகின்றன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 7500 பேர் வேலைவாய்ப்புப் பெறுவர்.

5.மாவட்டத் தொழில் மையம் (District Industrial Centre)

சிறு தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தவும் தொழில் முனைவோர்க்கு வேண்டிய தகவல்கள். ஆலோசனை, நிதிஉதவி, தொழில் நுட்ப உதவி, மூலப்பொருள் கிடைக்குமிடம், சந்தைப்படுத்துதல் ஆகிய வழிவகைகளை ஒரே இடத்தில் வழங்க ஈரோடு மாவட்டத்தில் 17.9.1979 அன்று மாவட்டத் தொழில் மையம் தொடங்கப்பட்டது. இம்மையத்தின் சான்றிதழ்களே வரைபட அனுமதி, மின் இணைப்பு. வங்கிக்கடன் முதலியவை பெற உதவுகின்றன. 31.3,2003 முதல் ஏற்றுமதி வழிகாட்டு மையமும் இயங்கி வருகிறது.

6.ஈரோடு மாவட்டச் சிறுதொழில்கள் சங்கம்

கோவை மாவட்ட சிறுதொழில் சங்கத்திலிருந்து (Coimbatore District Small Industries Association - CODISIA) பிரிந்து ஈரோடு மாவட்டச் சிறு தொழில் சங்கம் (Erode District Small Industrial Association EDISIA) அமைக்கப்பட்டுத் தொழில் முனைவோர் நலன் காத்து வருகிறது.

7. பெடக்சில் (Powerloom Development & Export Promotion Council)

விசைத்தறி வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திக்கழகம்

பம்பாயில் 1995ல் தொடங்கப்பட்டது. ஈரோட்டிலும் அடுத்ததாக அமைந்து அரும்பணியாற்றுகிறது.