பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

175


தாராபுரம் வட்டம் எல்காம் வலகக் கல்வெட்டுகளில் ஏறிவீர பட்டினம் குறிக்கப்படுகிறது.

உள்ளூர் வணிகர்கள்

ஈரோடு மாவட்டப் பகுதி வணிகர்கள் வெளிநாடுகட்கும் சென்றுள்ளனர். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் கூடிய வணிகக் குழுவில் ஈரோடு மாவட்ட கண்ணபுரம், பட்டாலி, கீரனூர், இராசராசபுரம், தலையூர் ஆகிய ஊர்களின் வணிகர்கள் இடம் பெற்றிருந்தனர்.

வெள்ளக்கல் வியாபாரி புண்ணிய தேவன்
கண்ணபுரம் வியாபாரி இலத்தூருடையான் நமசிவாயன்
காங்கயம் வியாபாரி திருநாகீசுவரமுடையாள்
பட்டாலி வியாபாரி பெரியான் ஆண்டையான்
கீரனூர் உடையான் கொங்குமண்டல சீலைசெட்டி
கொற்றனூர் உடையான் மண்டல சுவாமி
தலையூர் நன்முத்து வாணிகள்

போன்ற பலர் ஆலயங்களுக்குக் கொடையளித்துள்ளனர். காங்கயம். தாராபுரம் வட்ட வியாபாரிகளே அதிகமாக இருந்துள்ளனர்.

வெளியூர் வணிகர்கள்

ஈரோடு மாவட்ட பகுதிகளுக்கு வந்த வணிகக் குழுவினர் அல்லாத பிற வெளிநாட்டு வணிகர்களும் ஆலயப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

"பாண்டி மண்டலத்துக் கல்வாவி நாட்டு அரசநாராயணப் பெருந்தெருவான சுந்தரபாண்டியபுரத்து வியாபாரி நல்லூருடையான் அம்பலத்தேவன் பெருமாள் ஆன குமரபாலன்"

"ஆமூர் நாட்டு வெள்ளூரான கோதண்ட ராமபுரத்து வியாபாரி மிலட்டூருடையான் பெரிய நாயன இனியான்"

"நித்தவிநோத வளநாட்டு கிழார்க் கூற்றத்து மாத்தூரில் இருக்கும் வியாபாரிகளில் மலரியூருடையான் அறிவுடையான் தில்லை நாயகன்"