பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

197


நாட்டுப் பாடல்கள்

செல்லத் திருமணம்

"சித்திரை மாசத்திலே செல்லக் கலியாணம்
பத்தினியா பெத்தெடுத்த பாசக்கிளி கலியாணம்

பாக்கு மரம்பொளந்து பாதையெல்லாம் பந்தலிட்டு
தேக்கு மரம்பொளந்து தெருவெல்லாம் பந்தலிட்டு

என்னென்ன சீதனங்க எங்க இளங்கொடிக்கு
பட்டி நெறஞ்சுவர பசுமாடு சீதனங்க

உக்காந்து பால்கறக்க மூக்காலி சீதனங்க
சீதனங்க சொல்ல செமநேரம் ஆகுமம்மா".

மணமகனின் சகோதரியர், மணமகளைக் கேலிசெய்தல்

"கருநாவப் பழம்போலே கருத்திருக்கும் பெண்ணுக்கு
எலுமிச்சக்கனி போலே எங்களண்ணன் வாச்சாரு

பேரீச்சம் பழம்போலே பிசுபிசுக்கும் பெண்ணுக்கு
பப்பாளிப் பழம்போலே எங்களண்ணன் வாச்சாரு"

மணமகள் வீட்டார். மணமகனைக் கேலி செய்தல்

"எண்ணைக் குடத்திலே எறும்பென்று நாங்கிருந்தோம் ஈஸ்வரிக்கு மாலையிடும் மாப்புளையும் இவர்தானோ

தண்ணிக் குடத்திலே தவளையென்று நாங்கிருந்தோம் சரசுவதிக்கு மாலையிடும் மாப்பிளையும் இவர்தாளோ"</poem>}}

தாலாட்டு - மாமன் சீர்

"தூங்காத கண்ணுக்கு துரும்புகொண்டு மையெழுதி ஒறங்காத கண்ணுக்கு ஓலைகொண்டு மையெழுதி
அஞ்சு கிளியெழுதி அதுமேலே முகமெழுதி
கொஞ்சங்கிளி கொண்டெழுதி கொண்டுவாரார் உம்மாமெ