பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

19


மாவட்ட நிர்வாகம் இயங்கத் தொடங்கியது, ஈரோடு நகராட்சிக்குப் புதிதாகக் கட்டியிருந்த நகராட்சிக் கட்டிடத்தில் மாவட்ட நிர்வாகம் இயங்கியது, திரு. இலட்சுமிரத்தன் பாரதி அவர்கள் முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

1975ல் சத்தியமங்கலம் தனிவட்டம் ஆக்கப்பட்டிருந்தது. 4.7.1979ல் பெருந்துறை வட்டமும், 1.8.1981ல் காங்கயம் வட்டமும் ஏற்பட்டன. ஈரோடு, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, காங்கயம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய ஏழு வட்டங்களோடு ஈரோடு மாவட்டம் விளங்குகிறது.

ஈரோடு மாவட்டம் ஈரோடு, தாராபுரம், கோபிசெட்டிபாளையம் என்ற மூன்று வருவாய்க் கோட்டங்களை உள்ளடக்கியுள்ளது. ஈரோடு வருவாய்க் கோட்டத்தில் ஈரோடு, பெருந்துறை வட்டங்களும், தாராபுரம் வருவாய்க் கோட்டத்தில் தாராபுரம் காங்கயம் வட்டங்களும் கோபிசெட்டிபாளையம் வருவாய்க் கோட்டத்தில் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானி வட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன.