பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

34. ஊரும் சீரும்


பழங்காலத்தில் மக்கள் பெரும்பாலும் நீர்நிலைகளின் அருகே, குறிப்பாக ஆற்றங்கரைகளில் ஊர்கள் அமைத்து வாழ்ந்தனர். மக்கள் தொகை பெருகவே பிற இடங்களை தேடிச் சென்றனர். அவை காடுகளாக இருக்கவே,

"காடு கொன்று நாடு ஆக்கி
குளம் தொட்டு வளம் பெருக்கி
கோயிலொடு குடிநிறுவி"

வாழத் தலைப்பட்டனர். குடியிருப்புக்கன் பல பகுதிகளில் ஏற்படவே அவற்றைக் குறிக்க ஒரு குறியீடு தேவைப்பட்டது. இருக்கின்ற இடத்தின் அமைப்புக்கு ஏற்றோ, ஊரை ஏற்படுத்தியவர் அல்லது அதன் தலைவர் பெயராலோ ஊர் அழைக்கப்பட்டது. புதியதாக ஏற்பட்ட ஊர் புத்தூர் - புதூர் எனப்பட்டது. மேட்டில் இருப்பது மேட்டூரும், காட்டை ஒட்டி இருப்பது காட்டூரும் ஆயிற்று. பிடாரி கோயில் இருந்த ஊர் பிடாரியூரும், அறச்சாலை உள்ள ஊர் அறச்சாலையூர் ஆயிற்று. இராமநாதன் ஏற்படுத்தியது இராமநாதபுரம் ஆயிற்று. சோழ கங்கன் நினைவாக சோழகங்கபாளையம் என அழைக்கப்பட்டது. குருக்கள் வாழ்ந்த ஊர் குருக்கபாளையம், சைவத் தம்பிரான் கொடை பெற்ற அல்லது வாழ்ந்த ஊர் தம்பிரான்வலசு எனப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 4687 ஊர்கள் உள்ளன. (இப்போது நகர்ப் புறத்தில் பல்வேறு புதிய "நகர்கள்" ஏற்பட்டிருப்பது சேர்க்கப் படவில்லை). நகரங்கள் மிகக் குறைவு. கிராமப் புறங்களே அதிகம். ஊர்களின் பின்னொட்டை வைத்து அவற்றை வகைப்படுத்தியுள்ளனர்.

பாளையம் என முடியும் ஊர்கள் 1828
புதூர் என முடியும் ஊர்கள் 565
ஊர் என முடியும் ஊர்கள் 561
வலசு என முடியும் ஊர்கள் 493
பட்டி என முடியும் ஊர்கள் 185