பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

ஈரோடு மாவட்ட வரலாறு


சத்திரத்தில் பள்ளிக்கூட வகுப்புகள் நடைபெற்றன. மற்ற இடங்களில் அழிந்து விட்டன. அல்லது அழியும் நிலையில் உள்ளன.

மின்சாரம்

விவசாயத்திற்கும் தொழிலுக்கும் இன்று இன்றியமையாது வேண்டியது மின்சாரம் ஆகும்.

தமிழ்நாட்டில் பைகாரா (1933), மேட்டூர் (1937), பாபநாசம் (1941) ஆகிய இடங்களில் நீர்மின் சக்தியால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.இம்மூன்று இடங்களிலும் மின்சார உற்பத்தியைத் தொடங்கிய பெருமை மின்துறை தலைமைப் பொறியாளர் ஹென்றி ஹோவேர்டு அவர்களையே சாரும்.

இம்மூன்று இடங்களிலும் உற்பத்தியாகும் மின்சாரம் ஈரோட்டுக்கு அனுப்பப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் மாநிலமெங்கும் பகிர்ந்தளிக்கப்பபடுகிறது. முன்பு அரசுத்துறையாக இருந்த மின்துறை தன்னாட்சியுடன் மின்வாரியமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமையிடம் தவிர ஈரோட்டிலும் மதுரையிலும் மட்டுமே பெரிய நிறுவனம் உள்ளது.

மாவட்டத்தில் பல இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை, சமய சங்கிலி, வெண்டிபாளையம் ஆகிய இடங்களில் காவிரியில் தடுப்பணைகட்டி மின்சாரம் எடுக்கப்படுகிறது. இவ்வாறு மின்சாரம் தயாரிப்பதில் இந்தியாவிலேயே ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடம் வகிக்கிறது. இதற்காக நான்கு இடங்களில் துணை மின் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆப்பக்கூடல் சக்திநகர் சக்தி சர்க்கரை ஆலையும், சத்தியமங்கலம் ஆலத்துக் கோம்பை பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலையும் மின்சாரம் உற்பத்தி செய்து தங்கள் பயன்பாட்டுக்குப் போக மீதி மின்சாரத்தை மின்வாரியத்திற்கு அளிக்கின்றன. ஒரு தனிமனிதனின் மின்சாரப் பயன்பாட்டு அளவைக் கொண்டே ஒரு நாட்டின் முன்னேற்றம் கணிக்கப்படுகிறது.