பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

235


தொம்பர், பட்டர், பறையர், மறவர், வலையர் ஆகியோருக்கு வரி இல்லை. ஆனால் அவர்கள் 'ஏவின ஊழியம்' செய்ய வேண்டும். சம்பளம் இல்லாமல் ஊர்ப் பொதுவேலைகளையும் அரசாங்க (அரண்மனை) வேலைகளையும் செய்ய வேண்டும். அவ்வாறான பணி 'வெட்டி', 'அமஞ்சி' எனப்படும். (இன்று கூட பயனின்றி வேலை செய்பவரை 'வெட்டிவேலை' என்று கூறுகிறோம். அது 'அமஞ்சி' என்றும் கூறப்படும். அமஞ்சி செய்வோர் வாழ்ந்த இடம் 'அமஞ்சிக்கரை' இன்று 'அமைந்தகரை' என்று பிழையாகக் கூறப்படுகிறது).

காராளமாணிக்கி, படிக்காரப்புலவர், குறுப்பாண்டி, கூத்தாடி, முடவாண்டி இவர்களுக்கும் வரியில்லை. இருப்பினும் இவர்களுக்கு 'வெட்டி வேலை' இல்லை, அரண்மனை அமஞ்சியும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

சமூக - சமய ஒருமைப்பாடு

ஈரோடு மாவட்டத்தில் சமூக ஒருமைப்பாடும் சமய நல்லிணக்கமும் எப்பொழுதும் இருந்துள்ளன. கொடுமுடி, நத்தக்காரையூர், காடையூர், பவானி போன்ற பல ஊர்களில் சிவாலய வளாகத்தின் எல்லைக்குள்ளேயே வைணவக் கோயில்கள் இன்றும் உள்ளன. ஈரோடு, கொடுமுடி போன்ற ஊர்களில் சைவ - வைணவக் கோயில்களுக்கு ஒரே கொடை அளிக்கப்பட்டுள்ளது.

"திருப்பாண்டிக் கொடுமுடியாளுடையார்க்கும்
பெரிய திருவடி நன்னாயனார்க்கும்"
"தொண்டீசுவரமுடைய தம்பிரானார்க்கும்
பள்ளிகொண்ட பெருமாளுக்கும்"

ஒரே கொடை அளிக்கப்பட்டுள்ளது. வேளாளர் சபையாகிய வெள்ளான் நாட்டாரும் வேட்டுவர் சபையாகிய பூலுவநாட்டாரும் இணைந்து பல ஊர்களில் கூட்டாகக் கொடையளித்துள்ளனர்.

சர்க்கார் பெரியபாளையம் மறவபாளையம் ஆகிய ஊர்களில் சிவன்கோயில் வருவாயிலிருந்து "சமணசந்தியுள்ளிட்ட வெஞ்சனங் களுக்கும் செலவாக்க" என்று கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. மறவ பாளையத்தில் சிவன் கோயில் கொடைக்குத் தீங்கு விளைவித்தவர்கள்