பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

245


நட்டாற்றீசுவரன் கோயில்

சாவடிப்பாளையம் புகை வண்டி நிலையத்தின் கிழக்கே காவிரி நடுவே உள்ள சிவாலயம்.

ஊதியூர் மலை

கொங்கணச் சித்தர் வாழ்ந்த இடம். முருகன் கோயில் உள்ளது.

கதித்த மலை

ஊத்துக்குளி அருகேயுள்ள முருகன் கோவில், அருணகிரியார் குறிப்பிட்ட தலம்.

நாட்டராயன் கோயில்

வள்ளியறச்சல் கிராமத்தில் மாத்தபுரம் அருகேயுள்ள மிகப் பழைய கோயில். சேரன் மாந்தரஞ்சேரல் அமைத்த கோயில்.

வீரக்குமாரசாமி கோயில்

வெள்ளகோயிலில் உள்ள சிறப்பான கோயில்

செல்லக்குமாரசாமிகோயில்

முத்தூர் அருகே சின்னமுத்தூரில் உள்ள திருக்கோயில்

விசயமங்கலம்

மிகப்பெரிய சமணக்கோயில், சந்திரப்பிரப தீர்த்தங்கரர் கோயில், கொங்கு வேளிர் வாழ்ந்த ஊர். அவர் சிலையும் உள்ளது.

சீனாபுரம்

விஜயகிரி வேலாயுதசாமி கோயில், மமுட்டித் தோப்பில் ஆதிநாதர் சமணக்கோயில் உள்ளது.

சர்க்கார் பெரியபாளையம்

தேவார வைப்புத்தலம். சிற்பக்கலையில் மிகச்சிறந்த கொங்குக் கோவில்.

வெள்ளோடு

பெரிய குளத்தில் பறவைகள் சரணாலயம், ஆதிநாதர் சமணக் கோயில் உள்ளது. காலிங்கராயன் சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது.