பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

ஈரோடு மாவட்ட வரலாறு


இம்மாவட்டப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில அகழ்ந்தாயப்பட்டுள்ளன.

பழைய ஆய்வுகள்

ஈரோடு மாவட்டத்தின் பழங்கால வரலாற்றுப் பெருமையைத் தொல்பொருள் ஆய்வு மூலம் வெளிப்படுத்தியவர்கள் மேலை நாட்டின ரேயாவர். எம்.ஜே. வால்ஹௌஸ், அலெக்ஸாண்டர் ரீ போன்றோர் அவர்களுள் முக்கியமானவர்கள்.

ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், கணியாம்பூண்டி, நல்லாம்பட்டி போன்ற ஊர்களில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளிலேயே சில பெருங்கற்கால சவக்குழிகள் திறக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இங்கு கல்வட்டம் (Cairan Circle). கல்லறை (Dolmenoid Cist), தாழி (Urn}. நெடுங்கல் (Menhir), நடுகற்கள் {Hero Stones - Memorial Stones), ஆகியவை கிடைத்துள்ளன. கொங்குப் பகுதியில் ஈரோடு மாவட்டத்திலேயே இவை அதிகம் கிடைக்கின்றன.

இவற்றிலிருந்து இரும்புக் கருவிகள், குதிரை லாடம், செப்புப் பாத்திரங்கள், தங்க அணிகலன்கள், வெண்கலப் பொருட்கள், சுடுமண் பொம்மைகள், பலவகை மட்பாண்டங்கள், காதணிகள், சங்கு அணிகலன்கள், பெரில், அக்குவா மெரினா, கார்னீலியன், ஜாஸ்பர், அகேட், குவார்ட்ஸ் போன்ற வண்ணக் கற்களால் செய்யப்பட்ட பாசிகள், மணிகள், சுடுமண் விளையாட்டுப் பொருள்கள். தக்கிளிகள் எடைக்கருவிகள், கடவுள் உருவங்கள் ஆகியவை கிடைத்துள்ளன.

இவை பற்றிய விரிவான அறிக்கை "கல்கத்தா ராயல் ஆசியாடிக் சொஸைட்டி" பருவ இதழ் 7இல் பக்கம் 17 முதல் 34 வரை 1875இல் எம்.ஜே.வால்ஹௌஸ் அவர்களாலும், 1910-11ஆம் ஆண்டு தொல்லியல் துறை ஆண்டறிக்கையில் பக்கம் 12 முதல் 15 வரை அலெக்ஸாண்டர் ரீ அவர்களாலும் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை அரசினர் அருங்காட்சியகத்தின் தொல்லியல் துறைக் காப்பாட்சியராக இருந்த வி.என். சீனிவாச தேசிகன் 1964-68ஆம்