பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

ஈரோடு மாவட்ட வரலாறு


நம்புவதால், இவர்கள் பூர்வீகம் நீலகிரியாக இருக்கலாம். இருளர் குலப்பிரிவும், பேச்சுமொழியும் ஊராளிகளின் குலப் பிரிவோடும் பேச்சுமொழியோடும் ஓரளவு ஒத்துள்ளதால் இவர்கள் இருளர் வழி வந்தோர் என்று கருதுவோரும் உண்டு,

காட்டுப் பொருள்களால் அமைந்த குடில்களில் வாழ்கின்றனர், இவர்கள் பாலைக் காய்ச்சாமல் குடிப்பர். ஆடவர் காதுவளையம், பாசிமணி மாலை. கணையாழி அணிவர். பெண்கள் மூக்குத்தி, காதோலை, கழுத்ததணி, வளையல், தண்டை அணிவர். இவர்களின் இசைக்கருவிகள் பீனாசி, குவாறு, பேறை, பேற தம்பட்டே என்பன. இவை வழிபாட்டுக்கு உரியவை. திருமணம், இறப்பு, கோயில்விழா எல்லாவற்றிலும் இசையும் ஆடல்பாடலும் உண்டு.

இவர்களிடையே 12 குலப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்புக்கும் 'கொத்தாளி' அல்லது 'கவுண்டன்' என்ற தலைவன் உண்டு. இவர்களை 'ஊர்க்கவுண்டன்' என்று அழைப்பதும் உண்டு. இவருக்கு தண்டனை அபராதம் வழங்கும் அதிகாரம் உண்டு. "பண்ணாரி ஆத்தா", "பெளெரெசாமி", "மூலேசுக்கார அய்யா", "கும்பப்பா”, “ரங்கநாதர்" முதலிய சுவாமிகளை வழிபடுகின்றனர். "பண்ணாரி ஆத்தா" மட்டும் பெருமைக்குரிய பெண் தெய்வமாகும்.

ஆண் குழந்தைக்கு தந்தைவழிப் பாட்டன் பெயரும், பெண் குழந்தைக்குத் தாய்வழிப் பாட்டியின் பெயரும் பெரும்பாலும் வைக்கப்படுகிறது. பெண் பேச மணமகள் வீட்டுக்கு வரும்போது "கொக்கே தடி" என்ற மரத்துண்டை அளிப்பர். திருமணம் முடியும்வரை அது மணமகள் வீட்டில் இருக்கும். மணமகன் வீட்டு "கொக்கே தடி" பெண் வீட்டில் இருந்தால் அதுவரை வேறு எவரும் பெண் கேட்க வரக்கூடாது.

அந்தி வேளையில் தான் சாவு ஊர்வலம் நடைபெறும். "கொப்பே" அல்லது "கொப்பே கூரை" என்று இடுகாடு அழைக்கப்படுகிறது. நீத்தார் நினைவுக்கடனைத் தவறாமல் செய்வர். இல்லாவிடில் ஆவி வந்து கேடு செய்யும் என்பது நம்பிக்கை, மலைகளையே வீடாகக்