பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

ஈரோடு மாவட்ட வரலாறு


உள்ளது. பராந்தகன் காலத்தில் கொங்கு நாட்டு விவகாரங்களைக் கவனிக்க “கொங்கு ஸ்ரீகார்யம் ஆராயும் காரிநக்கன்" என்ற அலுவலன் இருந்ததாகத் திருவிடைமருதூர்க் கல்வெட்டுக் கூறுகிறது.

1) பரகேசரி கோநாட்டான் வீரசோழப் பெருமானடிகள் [942-980)

கொடும்பாளூர் இருக்குவேளிர் மரபில் "மகிமாலய இருக்குவேள் ஆயின பராந்தக வீரசோழன்" என்பவன் பராந்தக சோழனின் படைத் தலைவனாக விளங்கினான். பராந்தகன் பெயரையும், பராந்தகனின் பட்டப் பெயர்களில் ஒன்றாகிய 'வீரசோழன்' என்ற பெயரையும் பெற்றிருந்தான். அவனே முதல் கொங்கின் பிரதிநிதியாகப் பராந்தக சோழனால் நியமிக்கப்பட்டான்.

இவனுடைய கல்வெட்டு ஈரோடு மாவட்டம் காங்கயம் வட்டம் வள்ளியறச்சல் மாந்தீசுவரர் கோயிலில் இரண்டு உள்ளது. ஒன்று 6ஆம் ஆட்சியாண்டையும் மற்றொன்று 38ஆம் ஆட்சியாண்டையும் குறிக்கிறது. இவன் ஈரோட்டில் தன் பெயரால் 'மகிமாலீச்சுரம்" என்ற சிவன் கோயிலைக் கட்டினான். அவிநாசிவட்டம் ஆலத்தூரிலும் இவன் கல்வெட்டுக் காணப்படுகிறது.

2) இராசகேசரி வீரசோழக் கலிமூர்க்கப் பெருமாள் (960-1004)

தாராபுரம் வட்டம் பிரமியத்தில் இவனுடைய கல்வெட்டுக்கள் மூன்று கிடைத்துள்ளன. அவை 13, 17, 24ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தவை. இவனது மனைவியர்

"நம்பிராட்டியர் வரகுணமாதேவியாரான நாட்டானத்தார்,
நம்பிராட்டியார் வளவன் மாதேவியாரான இட்டில் மூத்தார்"

ஆகியோர். இருவரும் பிரமியம் கோயிலுக்குக் கொடையளித்துள்ளனர்.

3. பரகேசரி கலிமூர்க்க விக்கிரம சோழன் (1004-1047)

இவன் கல்வெட்டுக்கள் ஆதியூர், உலகடம், காவேரிபுரம், குண்டடம், கோனாபுரம், திங்களூர், பட்டாலி, பிரமியம், பொன்னி. வாடி, மூலனூர், வள்ளியறச்சல், விசயமங்கலம் ஆகிய இடங்களில்