பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

ஈரோடு மாவட்ட வரலாறு


அரசன் பறிமுதல் செய்தான். அரசனின் படைத்தலைவன் 'பெருமாள் சாமந்தரில் பெரியான் சோழனான வீரசோழக் காங்கயன்' என்பவன்.

7) பரகேசரி உத்தம சோழ வீரநாராயணன் (1138-1149)

இவன் கல்வெட்டுக்கள் பரஞ்சேர்வழி. கத்தாங்கண்ணி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளை.

பரஞ்சேர்வழியில் உள்ள வீரநாராயணப் பெருமாள் கோயில் இவன் காலத்தில் கட்டப்பட்து. காவடிக்கா நாட்டில் வீரநாராயண நல்லூர் என்ற ஊர் உள்ளது. ஒரு முகத்தலளவைக்கும் 'வீரநாராயணன்' என்ற பெயர் இருந்தது.

8) இராசகேசரி குலோத்துங்கசோழன் (1149-1158)

இவன் கல்வெட்டுக்கள் குண்டடம், கொடிவேரி, பிரமியம், மறவபாளையம், முத்தூர், விசயமங்கலம் ஆகிய ஊர்களில் கிடைக்கின்றன.

மாவலி வாணாதிராயர் மரபினர் ஒருவர் இவனிடம் படைத் தலைமையேற்றுள்ளார். பிரமியம் கல்வெட்டில் "இராசராசபுரத்தில் பெருமாள் சாமந்தரில் மாவலி வாணராயர் அழகன் சோழப் பிரானான கங்கவதரையன்' என்று அவன் குறிக்கப்பட்டுள்ளான்.

முத்தூர் குலோத்துங்க சோழீசுவரம் இவன் பெயர் பெற்றுள்ளது. இராசகேசரி மரக்கால் இவன் காலத்தில் வழக்கில் இருந்துள்ளது. )

9) பரகேசரி வீரசோழன் (1168-1195)

இவன் கல்வெட்டுக்கள் தாராபுரம், கீரனூர், அலங்கியம் ஆகிய ஊர்களில் கிடைத்துள்ளது. குறுப்பு நாட்டின் தென்பகுதி வீரசோழ நாடு என்று இவன் பெயரால் அழைக்கப்பட்டது. இவன் தென் கொங்குப் பகுதியையும் தன் கீழ்க் கொண்டு வந்ததால் 'இரு கொங்கும் ஆண்ட' என்ற பட்டப் பெயர் சூட்டிக் கொண்டான்.

விசயமங்கலம், பாரியூர், கீரனூர் ஆகிய ஊர்களில் காணப்படும் 'திரிபுவன வீரதேவன்' இவனே என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.