பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா மேல்நோக்கி இருக்கும் படியாக எடைக் குண்டைப் பிடித்து, முழங்கைகளை மடித்து, தோள்களைத் தொடும்படியாகக் கொண்டுவர வேண்டும். உடலானது எந்த விதத்திலும் அசையவோ, தூக்குவதற்கு உதவவோ கூடாது. (கைகளை மடங்குமுன் மூச்சிழுத்து, விரிந்தவுடன் மூச்சு விடவேண்டும்.) (8) கால்களை சிறிது அகலமாகவும், முழங்கால் களைக் கொஞ்சம் மடக்கியதுபோலவும், கால்களுக்கு முன்னால் எடைக்குண்டு இருக்கும்படியும், முதுகை மட்டும் நிமிர்த்தியும் நிற்கவும். பிறகு வேகமாக ஒரு கையை தலைக்கு மேலே முடிந்தவரை தூக்கி உயரத்தில் நிறுத்த வேண்டும். பிறகு கால்கள் விறைப்பாக ஆகலாம். ஆனால் மீண்டும் தொடங்கும்போது, கால்கள் எடைக்குண்டு முன்னிருந்த நிலையில் தான் இருக்க வேண்டும்.தடுமாற்றம் ஏற்படும். அது இல்லாமல் செய்ய வேண்டும். (10 பவுண்டு போதுமானது). கைத்தசைகளுக்காக: (9) இயல்பாகக் கை தொங்கும் அளவுக்கு, கைகளில் எடைக் குண்டுகளை வைத்து, கால்களை சேர்த்து வைத்தபடி மார்பை நிமிர்த்தி, அங்கிருந்து தோளுயரத்திற்குக் கொண்டு சென்று பின் கீழிறக்க வேண்டும்.