பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

இரகசியம் - 2
மனிதன்


னிதன் என்பவன் மகா சிருஷ்டி என்று பிரமிப்போடு வர்ணிக்கப்படுகிற ஒரு சிறந்த படைப்பு மனிதப் படைப்பு. உலகத்தில் வாழப் பிறந்த மனிதப் படைப்பு என்பதைவிட, உலகத்தை ஆளப்பிறந்த மனிதப் படைப்பு என்பதுதான் உண்மையான நிலைமை ஆகும்.

சாதாரணமாக வாழ்வதற்கே ஒரு தகுதி வேண்டும் என்றால், ஆள்வதற்கு என்று ஒரு தகுதி இருக்க வேண்டாமா? தகுதி இருக்கத்தான் வேண்டுமென்று எந்த தலைமை வந்து வற்புறுத்த முடியும்? வலியுறுத்த முடியும்? யாருக்கு அந்த அதிகாரம் இருக்கிறது. யாரும் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதுதானே மனித வரலாற்றில் வழிவழி வருகிற மாபெரும் சிக்கலாகும்.

ஆகவேதான், வாழப் பிறந்த மனிதன் எப்படி இருக்க வேண்டும்? ஆளப் பிறந்த மனிதன் எப்படித் திகழ வேண்டும் என்பதை வற்புறுத்தாமலேயே, இயல்பாகச் சொல்லிச் சென்று இருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.