பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா •o 39

- - -

முழுவதையும் மறைத்துக் கொண்டு கிடக்கின்றன. இவை எல்லாம் குளக்கரை ஓரமாகக் கிடக்கும் பாசான்கள்போல, பாசான்களைத் தள்ளிவிட்டால் மீண்டும் வேகமாக வந்துசேரும்.

அதுபோலவே இந்த மாசுகளும், நாம் தீவிரமாக அகற்ற முயற்சிக்க, முயற்சிக்க அவை மீண்டும் மீண்டும் வந்து சேர்ந்து கொள்கின்றன. புதுப்புது வேடங்களிட்டு மனிதனைத் திக்கு முக்காடச் செய்கின்றன.

ஆசிரியர் என்பவர் ஒருவித கட்டுப்பாடான பயிற்சி மூலம் மனதின் மாசுகளை விரட்ட முயற்சிக்கிறார். மீண்டும் அவை வந்து சேராதபடி வேலியிட்டுத் தடுக்கிறார். இதற்காகத் தினம் மனப் பயிற்சி செய்கிற ஒரு மாணவன்தான் வித்வான் ஆகிறான். ஆனால் குரு என்று நாம் எல்லா ஆசிரியர்களையும் அழைப்பதில்லை. ஒரு சிலரைத்தான் நாம் குரு என்று போற்றி மகிழ்கிறோம்.

3. (ჭჩ(Ib

'குரு என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். 'குரு என்றால் இருட்டு' என்றும், குரு' என்றால் வெளிச்சம்' என்றும் பொருள் உண்டு. அறியாமை என்ற இருட் டிலிருந்து, அறிவு என்கிற ஒளிமயமான உலகத்திற்கு அழைத்துச் செல்பவரைத்தான் குரு என்கிறோம்.

குருமார்கள் எல்லோருமே ஐம்புலன்களின் அர்த்தமற்ற அட்டுழியங்களிலிருந்து காப்பதற்காகவே

அவதாரம் எடுத்தவர்கள் போல உதவி செய்கிறார்கள்.

குரு என்றால் இருட்டு என்றும், குரு என்றால்

வெளிச்சம் என்றும் பொருள்.