பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


83 ஒன்று மற்ாறி ஒன்றாகப் பயிற்சியைத் தொடரும்போசி (Alter-mate) மாறி மாறி என்றும் கட்டளையிடலாம். இப்படியாக வசதிக்கேற்றவாறு, மாணவர்களின் எளிதான இயக்கத்திற்கும்; துரிதமான செயல்களுக்கும், கட்டளைகளை மாற்றிக் கொண்டு, கம்பீரமாகக் கொடுக் கிறபோது, வகுப்பு மாணவர்களுக்கும் விறுவிறுப்பு இருக்கும். சுறுசுறுப்பு நிறைந்திருக்கும், செய்கையில் புதுப் பொலிவும் தெளிவும் சூழ்ந்திருக்கும். ஆகவே, கட்டளை கொடுக்கும் முறைகனை, கணக்காக கச்சிதமாக ஆசிரியர்கள் கற்றுத் தருகிற போது. கற்பிக்கும் கலையில் கவர்ச்சியும் எழுச்சியும் கரைபுரண்டு, காண்பதற்கு அரிய காட்சியாகத் திகழும். r