பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= m. of பாழாகிப் போகிறது என்பதால்தான், இந்தத் தாண்டும் முறை கைவிடப்பட்டது. 8. மேற்கத்திய தாண்டுமுறை பற்றி எழுதுக (Western style) மேற்கத்திய தாண்டு முறையின்போது புவி ஈர்ப்புத் தானம், மேல்நோக்கிப் போகாமல், தாண்டுபவரின் பக்க வாட்டில் இருப்பதால், கொஞ்சம் பரவா யில்லை என்பதால், இந்த முறை ஏற்பட்டது. இதில் உதைத்து எழும்புகிற இடது காலே மீண்டும் தரையை முதலில் மிதிக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். 9. தாண்டி உருளும் முறையைப் பற்றி (Straddle Style) எழுதுக: இந்தத் தாண்டும் முறையில், புவி ஈர்ப்புத்தானம் குறுக்குக் குச்சிக்கு அருகிலேயே இருப்பதால், அதிக சமநிலையுடன், அதிக உயரம் தாண்டி விட முடிகிறது. இந்தத் தாண்டலில், உதைத்தெழும்பிய காலின் மறு கால் தரையில் ஊன்றுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். - == 10. பாஸ்பரி தாண்டு முறையைப் பற்றி எழுதுக: இடது புறமாக வேகமாக ஓடிவந்து வலது காலால் உதைத்து எழும்பி, முதுகுப் பக்கமாகக் குச்சியைக் கடந்து தாண்டுவதாகும். துள்ளும் ஆற்றல் மிக்க, உயரமானவர்கள்தான் இதில் பங்கு பெறலாம். மணற் பரப்புக்குப் பதிலாக மெத்தைகள் தான் வேண்டும். மணற் பரப்பில் குதித்தால், உயிருக்கே ஆபத்து நேரும். -- 11. ஓடிவந்து துள்ளித் தாண்டும் இடத்தை அறிந்தறிவது எப்படி? குறுக்குத் கம்பத்தின் மையத்திற்கு வந்து, ஒரு கை முழு நீள அளவிற்கு கையை நீட்டிப்பார்த்து, அப்போ து எந்த இடத்தில் நிற்கிறோமோ, அந்த இடம் தான் தான்டுகின்ற அடையாள இடமாக (Take-offspot) வைத்துக் கொள்ள வேண்டும். வேகமாக ஓடிவந்து, அதே இடத்தில் ஒரு காலை ஊன்றி உதைத்து, மேலே எழும்ப வேண் டும். (படம் பார்க்க 5 அல்லது 7 காலடிகள் வருவதுபோல் அளந்து, ஒடி வரவேண்டும். 12. ஒரு குறிப்பிட்ட உயரத்தைத் தாண்ட எத்தனை வாய்ப்புகள் உண்டு: 3 வாய்ப்புக்கள் ஒருவருக்கு உண்டு. ஒருவர் மூன்று முறை தொடர்ச்சி யாக ஒரு குறிப்பிட்ட உயரத்தைத் தான் டிக் கட்க்க 19