பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழுவதுபோல, எந்த இடத்திற்கும் எறியலாம். 3 வளையத்தைப் பிடிக்கின்றபோது நின்ற அதே இடத்தில் இருந்துதான். வளையத்தை உடனே 1 வினாடிக்குள் எறிந்திடவேண்டும். வளையத்தை எறிகிறபோது, அவர் நடக்கவோ, தாண்டுவதோ கூடாது. அது தவறாகும். வளையத்தை விளையாடும்போது ஏற்படும் தவறுகள் யாவை: 1. எறிந்த வளையம் பொதுத்தரையில் (Neutral ground) விழுதல் 2. தோளுக்கு மேலாக வளையத்தைப் பிடித்து எறிதல் 3. ாறிவதுபோல் பாசாங்கு பண்ணி ஏமாற்றி எறிதல் எல்லாம் தவறுகளாகும். ஆடுகள எல்லைக் கோடுகளில் வளையம் *விழுந்தால், அது சரியா? தவறா? வளையம் எந்த எல்லைக் கோடுகளின் மீது விழுந்தாலும் அது சரியானதென்றே அறிவிக்கப்படும். 10. வளையப் பந்தாட்டத்தில் பின்பற்றப்படும் மேசைப் பந்தாட்ட விதி முறைகள் யாவை? மேசைப் பந்தாட்டத்தில், ஒரு ஆட்டத்தில் (Game) வெற்றி பெற 21 வெற்றி எண்கள் எடுக்கவேண்டும். சர்வீஸ் போடுவதற்கு பின்வரும் முறையைப் பின்பற்றவேண்டும் முதலில் புரு ஆட்டக்காரர் தொடர்ந்தார்போல் 5 சர்வீஸ் போட வேண்டும். பின்னர் எதிராட்டக்காரர் 5 சர்வீஸ் தொடர்ந்தார்போல் போடவேண்டும். இப்படியாக 5.10.15.20 என்று வெற்றி எண்களின் கூட்டலோ அல்லது எண்ணிக்கையோ வருகிறபோது சர்வீஸ் மாறிவரும். இப்படி ஆடி முதலில் யார் 21 வற்றி எண்களை எடுக்கிறாரோ அவரோ அல்லது அந்தக் குழுவோ வெற்றி பெற்றதென்று அ றிவிக்கப்படும். இருவரும் 20 வெற்றி எண்கள் எடுத்து சமமாக வந்தால், தொடர்ந்து 2 வெற்றி ங் என்களை எடுக்கும் குழுவே வெற்றியைப் பெறும். 55