பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
உடற்கல்வி என்றால் என்ன?

களாக விளங்கிக் கொண்டிருக்கின்றனர். அதாவது, மற்றவர்களை உழைக்கச் செய்துவிட்டு, அதில் வரும் பயனை மட்டும் அடித்து வளைத்துப் போட்டுக் கொள்வதில், அறிவு படைத்தவர்களாக ஆற்றலில் திளைத்தவர்களாக நெளிந்து கொண்டிருக்கிறார்கள்.

“உழைப்பதற்காகவே உடல் உண்டு. உழைத்தால் தான் உடல் சிறக்கும், செழிக்கும், சுகமளிக்கும். சொர்க்க வாழ்வைக் கொடுக்கும்” என்ற தத்துவத்தில் தற்கால மக்களுக்கு நம்பிக்கையேயில்லை.

“அப்படிப்பட்ட நாகரகக் காலம் இது.நமக்கெதற்கு உழைப்பு. உழைப்பது கேவலம். உடலை இயக்கிப் பணியாற்றுவது கீழ் மக்களின் பிழைப்பு , என்று உழைப்பைக் கேவலப்படுத்தும் வாழ்வாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

உலகத்திலே சிறந்த எந்திரம் மனித உடல்தான். அறிவாளிகள் உருவாக்கிய உழைக்கும் எந்திரங்கள், உடல் உறுப்புக்களின் உன்னத வடிவினைப் பார்த்து மறுபதிப்பாக உருவாக்கப்பட்டவை என்பதை மக்கள் மறந்து விட்டனர். ஏனென்றால் உழைக்கும் உடல் மீது அவர்களுக்கு அவ்வளவு வெறுப்பு.

துருவும் நோயும்

உருளாத எந்திரங்கள் துருப்பிடித்துப் போகின்றன என்பதை மட்டும் மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.

எந்திரங்கள் என்பது எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். அதற்காக வேலைகள் தருகின்றனர். வேண்டிய