பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

153


பயன்படுத்தாமல் விட்டுவிடுவது நாம் செய்யக்கூடாத வேலை.

உடலை அதிகமாக பயன்படுத்துவது நாம் செய்தே அழிகிற வேலை.

இவற்றை எப்படி செய்வது என்று இனி காண்போம்.

பயன்படுத்தும் பக்குவம்

உடலை இயற்கையாகவும் இதமாகவும் பயன்படுத்திட வேண்டும். ஏனெனில் அது வளரும் சக்தியுள்ள எந்திரமாகும். இப்படி மிக நுண்மையான உறுப்புக்களுடன் உருவாகியுள்ள உடலை, தேர்ந்த உடற் பயிற்சிகளாலும், செயல்களாலுமே பயன்படுத்திட வேண்டும்.

நமக்குத் தெரியும் உயிர்களுக்கும் உடல்களுக்கும் அடிப்படைத் தேவைசெயல்களும் இயக்கங்களும், என்று அந்த இயக்கங்களும் செயல்களும்தான் உடலை வளர்க்கின்றன. வாழ்விக்கின்றன. வளமாக்குகின்றன. சுகப்படுத்துகின்றன.

நாம் வாழும் நவீன காலமோ, உழைப்பை உதாசினப் படுத்திவிட்டது. புதிய கண்டுபிடிப்புகள் வாழ்க்கையை வளமாக்கியதுடன் வசதிகளை நிறைத்து அசதிகளைக் கொடுத்து விட்டன.

இதனால், மனிதர்கள் வேலை செய்யக் கூடிய வாய்ப்புக்களை இழந்தனர். கட்டாயமாகத் துறந்தனர். வேலைகள் செய்யக் கூடிய சூழ்நிலைகள் வந்தாலும் வெறுத்தனர்.உழைக்கவும் மறுத்தனர்.

சோம்பல் மக்களை சூழ்ந்துகொண்டது.தேசத்தின் உழைக்கும் ஆற்றலும் தாழ்ந்தது. மனித உடலின் வலிமையும் வீழ்ந்தது.மனித உடலுக்கு உழைப்பே முதன்மையான