ஆகவே, உடல்நலம் காத்தல் எனும் கொள்கையில் அறிவுடைய மாந்தர் யாவரும் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும். அதுவே அனைவரின் உரிமையும் கடமையும் ஆகும்.
1. சமநிலை உணவு, சத்துணவு
2. தூய சுற்றுப்புற சூழ்நிலை
3. வீட்டில் தூய்மை; வெளியிலும் தூய்மை
4. தனிப்பட்டவர்களின் புறத் தூய்மை, அகத் தூய்மை
5. அசுத்தமற்ற காற்று - சுத்தமான குடி நீர்
6. சுகாதாரப் பழக்க வழக்கங்கள், நல்ல நடத்தைப் பண்புகள், நயமான மரபுகளைப் பின்பற்றுதல்
7. நோயறியும் நுண்ணறிவு நோய்களிலிருந்து காத்துக் கொள்ளும் முன்னறிவு
8. சீரான, தொடர்ந்து செய்யும் உடற் பயிற்சி
9. நேரத்தில் தேவையான ஓய்வு - உடல் ஓய்வு - மன ஓய்வு
10. திட்டமிட்ட வேலைகள், சமமாக பரவலாக அதனைத் தொடர்கிற கடமைகள், எல்லாமே நல்ல தேகத்தை; வல்லமை மிகுந்த யூகத்தை; வீணாக்காத சக்தி வேகத்தை வழங்கும். அதுவே பரிபூரண வாழ்க்கையைப் பரிசாகத் தரும்.
மூன்று வகை வயது
தனிப்பட்ட மனிதர் ஒருவரின் வயது என்ன? என்று கேட்கப்படுகிற கேள்விக்குப் பிறந்த தேதியைப் பிரலா