பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
168
உடற்கல்வி என்றால் என்ன?


2.ஒவ்வொரு குழந்தைக்கும் செயல்படுகின்ற ஆற்றல் அந்த செயலை செய்திட அவர்கள் உடல் தாங்கும் சுமை (Load) என்னவென்பதையும் அறிந்துவைத்துக்கொள்வது நல்லது.

இவ்வாறு சுமைதாங்கும் தேக சக்தியை அவர்கள் மூன்று வகையாகப் பிரித்துக் கொண்டு செயல்படுவது சிறப்பானதாகும்.

(அ) இயல்பான தேகநிலை (Normal Load) இந்த தேகநிலையில், செய்கின்ற செயல்களுக்கு ஏற்ப, உயிர்க் காற்றை (Oxygen) உள்ளிழுத்துப் பெற்றுக் கொண்டு, சக்தி பெற்று சமாளிக்கும் இயல்பான தேகநிலையாகும்.

உடற்பயிற்சிகள் செய்யும் போது, எல்லா உறுப்புக்களும் இயங்க, வேண்டிய அளவுக்கு உயிர்காற்றைப் பெற்றுத்தந்து, காரியத்தை நிறைவேற்ற உதவும் முறை இது.

(ஆ) சிறப்பானதேகநிலை (CrestLoad) ஒரு காரியத்தை அல்லது உடற்பயிற்சியை செய்கிற போது, தேவையான உயிர்க்காற்றைத் திரட்டித் தருகிற உள் உறுப்புக்கள், பணி சிறப்புற அமைய உதவுகின்றன.

அதன் பிறகும் தொடர்ந்து உறுப்புக்கள் இயங்கி எதையும் எதிர்பார்க்காமல் உயிர்க்காற்றை அதே அளவு பெற்றுக் கொள்ள உழைக்கிற சக்தியுடன் திகழ்கிற தேக நிலையாகும்.

(இ) திறம் போதாத தேக நிலை (Over Load) ஒரு செயலைச் செய்கிறபோது,தேவையான உயிர்க்காற்றைத் திரட்டித் தர இயலாத தேக நிலை இது. அதன் காரணமாக, உயிர்க்காற்றுப் பற்றா நிலை உருவாகிவிடுகிறது. அதாவது, அதிகமாக உள்ளுறுப்புக்கள்