பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/253

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
251
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையாசமுதாய ஒற்றுமை சரியாமல் ஆக்கப்பட வேண்டுமானால், மக்களில் ஒருவருக்கொருவர் உணர்ந்து ஒற்றுமையுடன் வாழ்கின்ற பக்குவமான வாழ்க்கையாக அமையவேண்டும்.

ஒற்றுமையே வலிமை. ஒற்றுமையே உயர்வு தரும். உலக நாடுகள் இந்த ஒற்றுமைக்காகவே பாடுபடுகின்றன. பயன் தேடுகின்றன. விளையாட்டுக்கள் இந்த உலக ஒற்றுமையை நிலைநாட்டவே நிதமும் முயல்கின்றன.

கூடி வாழும் பண்புகள்

குழந்தைகள் குடும்பத்தில் பலரோடு, சேர்ந்து ஒற்றுமையாக வாழும் பண்பினைக் கற்றுக் கொள்ளத் தொடங்குகின்றனர்.

அங்கே ஆரம்பமாகின்ற அவர்கள் அனுசரித்துப் போகும்போக்கு அறிவு, அனுபவம், நடத்தைப் பண்புகள், தரம், பள்ளிகளில் மற்றும் கூட்டமாகக் கூடும் பொது இடங்களில் வளர்ந்தும், மாறாதபோது திருத்தமும் பெற்றும், பெருகிக் கொள்கின்றன.

ஆகவே, கூட்டமாக உள்ளவர்களிலிருந்து தனிப்பட்டவர்கள் பெறும் அனுபவங்களும், தனிப்பட்டவர்களிலிருந்து மற்றவர்களும் பெறும் அனுபவங்களும் என்று மாறி மாறி ஒன்றிவிடுகின்றன. இப்படிப்பட்ட வாய்ப்புக்களே சமுதாய அமைப்புக்களை கட்டுக்கோப்புடன் வழங்குகின்றன.

குழந்தைகள் தாங்கள் பிறந்தது முதல், ஏதாவது பலர் கூடியுள்ள இடங்கள் ஒன்றில் இருந்தும் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றனர். சமுதாயத்தில் நிகழ்கிற சமூகக்காரியங்கள், மத விழாக்கள், அரசியல் நடவடிக்கை