பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

உடற்கல்வி என்றால் என்ன?




உலகில் இன்னும் சில பகுதிகளில், அதிரடி முறையில் ஆட்சிப் பொறுப்பை பிடித்துக் கொண்டார்கள். அதனை இராணுவ ஆட்சி முறை என்றனர்.

எனவே, மக்களுக்கு மேலாக ஒரு உயர்ந்த இடம் இருக்கிறது என்று கூறி, அதனை தலைமை பீடம் என்றும், தலைமை ஏற்றவனை தலைவன், அரசன், அல்லது பிரதமமந்திரி என்ற பெயர்களையிட்டு அழைத்து மகிழ்ந்தனர்.அவன் வாழ்ந்த இடத்தைக் கோயில் என்றும் புகழ்ந்து பேசினர்.

தலைமைக்கு விளக்கம்

“தன் கூட வசிக்கின்ற மக்கள் கூட்டத்தை, ஒரு பொதுவான நோக்கம் கருதி, பொறுப்புடன் அழைத்துச் செல்கிற பொறுப்புக்கே தலைமை” (Leadership) என்ற பெயர் என்று மார்ஷல் மான்ட்கோமரி என்னும் ஆங்கில அறிஞர் கூறுவதை இங்கே கூர்ந்து கவனித்துக் கொள்ளலாம்.

எந்தத் துறையிலும் முன்னேற்றம் வரலாம். அப்படி ஒரு முன்னேற்றம் வருகிறது என்றால் அங்கே ஒரு நல்ல தலைமை இடம் பெற்றிருக்கிறது என்றே பொருள் கொள்ள வேண்டும்.

ஒருவர் நல்ல தலைவராயிருக்கிறார் என்றால், அங்கே இரண்டு வித நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை நாம் நன்கறியலாம்.ஒன்று, நல்ல தலைவன் தனது நயமான பொறுப்புக்களினால் தானும் ஒரு தக்க இடத்தை மக்களிடையே பெற்றுக் கொள்கிறான். இது நேரடியாக அவன் பெறுகிற மதிப்பும் மரியாதையுமாகும். இரண்டு, அவன் தலைமையால், மறைமுகமாக அவனது பணி