பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/283

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
281:
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா10. மற்ற ஆசிரியர்களுக்கு எந்த விதத்திலும் தாழாமல், ஏற்றத் தகுதிகளைப் பெற்று உயர்ந்த நிலையில் உலா வருதல்.

11. தங்கள் செயல்களில் தகுதிகளை உயர்த்திக் கொள்வது போலவே, படிப்பிலும் பட்டங்கள் பெறுவதிலும் தங்கள் அறிவுத் தகுதிகளை உயர்த்திக் கொள்ளுதல் போன்ற தகுதிகள் யாவும்,

உடற்கல்வித் துறையில் உன்னதமான தலைவர்களாக உயர்த்திவிடும்: அறிந்து ஆவன செய்க.

உடற் கல்வி ஆசிரியர்களுக்குரிய குண நலன்கள்:-

1. தலைமையை மதித்து ஒழுகுதல்.

2. உற்சாகம், உழைக்கும் ஆர்வம், தன் திறமையை உரிய முறைகளில் பயன்படுத்துதல்.

3. சுறுசுறுப்பு, அனுசரித்துப் போகுதல், உடல் நலக்குறைவு இல்லாமல் இருத்தல், மற்றவர்களுக்கு மனமுவந்து கூடி, செயல்களாற்றுதல்.

4. கட்டுப்பாடு, கடமை, கண்ணியம், பிறருக்கு உதவுதல், மற்றவர்களுக்கு ஆறுதலாக, ஆதரவாக இருத்தல்.

5. வலிமையும் உண்மையும் காத்தல்.

6. நம்பிக்கைக்குரியவராக விளங்குதல், சரியான முறையான சிந்தனை, நீதி காத்தல் நியாயம் வளர்த்தல்.

7. பரிவு, பச்சாதாபம், நேர்மை, தன்னடக்கம் பொது இடத்தில் காக்கும் பண்பாடுகள், அறிவாண்மை, தியாகம், சிறப்புச் செயல்கள் புரிதல் போன்ற குணவான்களாக விளங்குதல்.

8. உடல் நலத்துடன் இருத்தல், உண்மை பேசுதல், நகைச் சுவையுடன் நல்லதைப் பேசுதல்.

9. மதி நுட்பம், உழைப்பு, ஒருபுறம் சாராமல் நடுநிலை வகித்தல், கற்பிக்கும் காரியத்தில் ஆர்வம் கொண்டிருத்தல்.