பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

37


விழிகள்போல இருந்து ஒருங்கிணைந்து பணியாற்றி பயனளிக்கின்றன.

மருத்துவ வல்லுநர்கள் யாவரும் ஏகோபித்த கருத்தினைக் கூறுகின்றார்கள். உடற்பயிற்சிகள் மட்டுமே ஒருவரை சிறந்த உடல் நலத்துடன் வாழச் செய்கிறது, அத்துடன் நில்லாது. நோய்களை நீக்கியும் செம்மையாக வாழவைக்கின்றன என்றும் ஆணித்தரமாகக் கூறுகின்றார்கள்.

உடற்கல்வியானது உடல்நலக்கல்வியுடன் ஒன்று சேர்ந்து, முடிந்தவரை இந்த உடல்நலத்தைக் காத்து வளர்க்கும் உயர்ந்த தொண்டினைத் தொடர்ந்து செய்துவருகிறது.

இப்படிப்பட்ட உடற்கல்வியையும் உடல் நலக்கல்வியையும் பள்ளிமாணவ மாணவியர்க்காகத் திட்டமிடப்பட்டுக் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றனர். அதுவே அறிஞர்களின் ஆக்கபூர்வமான அரும்பணியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

உடல்நலக் கல்வியின் அடிப்படைக் கொள்கையின் தொகுப்பை நாம் 3 விதமாகப் பிரித்துக் காணலாம்.

  1. உடல் நல் அறிவு (Health Knowledge)
  2. உடல் நலப் பழக்கங்கள் (Health Habits)
  3. உடல்நலச் செயல்முறைகள் (Health Attitudes)

இம் மூன்று பண்புள்ள கொள்கைகளும் தனியார் உடல்நலம்; குடும்ப நலம்; சமூக நலம், தேசிய நலம் என்னும் நலம் காக்கும் நல்ல விளைநிலங்களாகும்.