பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாய்ப் பிரிந்ததில் ஆலாம் விழுதுகள் போலே மேலோர் முளைத்தாராம் - மக்கள் நடைமுறை யதனால் நன்மையுந் தீமையும் நடப்பதையுங் கண்டுபிடித்தாராம். காலா கதியினில் அழியா நீதி நூலாம் மறைகளும் சமைத்தாராம் - அதைக் கடவுள் திருவாய் மலர்ந்தரு ளியதென கருத்தினில் இருத்திட அமைத்தாராம். அருளே ஆண்டவன், அறிவே தெய்வம் அன்பேதான் பரசிவ மென்றார் - மற்றும் அரிதாம் நல்ல குணங்கள் உள்ளார் ஆண்டவன் தன்மை ஆமென்றார்: மருளாம் இருளை மனத்துள் நீக்கி மக்கள் சேவை செய்வீரே! மக்கள் சேவை மகதேவர்க்கே வணக்கம் என்றே கொள்வீரே! (மானிடன்) பண்டார சந்நிதி பண்டார சந்நிதி சைவப் - பழமான தம்புரானும் படுவெலையாக்கப் பட்டாரே - துஷ்டர்களாலே பரகதி சேர்க்கப் பட்டாரே - அந்தோ கொடுமை! பட்டம் கொள்ளும் திருக்கைலாய பரம்பரை பாத்தியவான் - பூரீ ல பூரீ பத்தரை மாத்துத் தங்கபஸ்பம் நித்தம் உண்டு உடல் புஷ்டியடைந்த பாலொடு பாதாம் பருப்பை அரைத்து பாகத்துடன் உபயோகித்திடு மடப் பாட்டும் பரத நாட்டியம் பார்ப்பார் பகலில் இரவில் பஜனைகள் புரியும் பலவித அபிஷேகங்கள் கொள்ளுவார் பல்லக்கினிலே பவனி செல்லுவார் உலகமநித்தியம் என்று சொல்லுவார் ஒம(த்)தைத் திருவாயில் மெல்லுவார். 158 (பண்) (பண்) (பண்) (பண்) (பண்) (பண்)