பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகில் எந்த சக்தியும் தனித்து வாழ முடியுமா? எந்நாளும் உங்கள் சேவையே! இந்நாட்டின் முக்கிய தேவையே! எழுது கோலும் வீரவாளும் எந்தநாளும் உலகையாள ஒன்று சேர்ந்து வாழ்க வாழ்கவே! - பெண் அன்போடு ஓடிவாங்க! 芯T.... GP,.. 芯町..,. ஆகாரம் உண்ண, எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க! - என்ற அனுபவப் பொருள் விளங்க - காக்கை அண்ணாவே! நீங்கள் அழகான வாயால் பண்ணாகப் பாடுறீங்க! - கா கா என ஒண்ணாகக் கூடுறீங்க! - வாங்க (கா. கா. கா) சாப்பாடு இல்லாமத்தவிக்குதுங்க - ஜனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க - என்றால் தாப்பாளைப் போடுறாங்க பாருங்க - அந்தச் சண்டாளர் ஏங்கவே - தன்னலமும் நீங்கவே தாரணி மீதிலே பாடுங்க ராகம் (பாடுங்க) (கா. கா. கா) எச்சிலைதனிலே எறியும் சோத்துக்குப் பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே! இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை எத்தனையோ இந்த நாட்டிலே! பட்சி சாதி நீங்க - எங்க பகுத்தறிவாளரைப் பார்க்காதிங்க பட்ச மாயிருங்க! - பகிர்ந்துண்டு வாழுங்க! பழக்கத்தை மாத்தாதிங்க! - எங்கே பாடுங்க! (கா... கா. கா.) - பராசக்தி 275