பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி பாட்டு பாட்டுக்குள்ளே நல்லபாட்டு - எங்கள் பாரதி பாட்டு வேதத்தி லேசொல்லும் நீதத்திலே - அதன் போதத்தி லேபஞ்ச பூதத்திலே, தீதற்ற தாயுற்ற, தெய்வப் பொருள் தன்னைச் சித்தத்திலே சேர்க்கின்ற பாட்டு வானத்தி லேமின்னும் மீனத்திலே - செழுங் கானத்தி லேசலத் தானத்திலே, காணத்தகும் எழில் கண்டு புகழ்ந்திடும் கற்பனைச் சொற்பொருட் பாட்டு: பாசத்திலே மிகு மோகத்திலே - பகல் வேசத்திலே சக வாசத்திலே மாசுற்ற மாந்தர் மனத்தைத் திருத்தி மனிதர்க ளாக்கிடும் பாட்டு: பிறப்பினி லேமெய் யுறுப்பினிலே - யுள் விருப்பினி லேபின் இறப்பினிலே ஒருப்படும் மாந்தர்கள் ஒர்இனம் ஒர்குலம் ஒன்றென்று சொல்லும் பாட்டு! (பாட்டுக்) (பாட்டுக்) (பாட்டுக்) (பாட்டுக்) (பாட்டுக்) நாட்டுக்கும் நாட்டுப் பண்பாட்டுக்கும் - பாப்பாவின் பாட்டுக்கும் மற்றுள்ள பாட்டுடனே வீட்டுச் சிறைதன்னில் பூட்டிய பெண்கள் விடுதலைக்கும் வந்த பாட்டு தேகத்தை யும்பொருள் போகத்தையும் - உயிர் மோகத்தையும் இந்த லோகத்தையும் விடும் தியாகத்தி லாகும்.சுதந்திர தாகத்தின் வேகத்திலே வந்த பாட்டு! 27 (பாட்டுக்) (பாட்டுக்)