உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 சமுதாய துரோகிகள், சுயநல பெருச்சாளிகள், இலட்சிய முத்திரை குத்திக்கொண்டு இழி தொழிலில் ஈடு படுவோர், பரிகசிப்போர், பின்னிருந்து பேசு வோர், உறுமுவோர், உதைப்பேன் என்போர் ; இந்த பட்டியல் அவன் உறுதியின் முன்னே எரிந்து கருகும். “பார்! பார்!...பசலைப் பயலே! உன் செல்வாக்கை செல்லாக்காசாக்குகிறேன்” பொறாமை உருவம். எனக் குமுறும் ஒரு "நான் உன் போல் புகழில் நெளியும் பூச்சியல்லவே நீ என் புகழுக்குத் தோண்டும் குழி உன்னையும் உன்போன்ற சதைக் குன்றுகளையும்விழுங்கிஜீரணித்து என் அழியாத புகழுக்கு அஸ்திவாரமும் அமைக்கும்" அன்று வீரமுழக்கம் செய்வான். . இதோ பாரப்பா.. மாட மாளிகை. மரகதக் குவியல், மனதிற்கேற்ற உல்லாசபுரி, இங்கே வந்தால் மல்லிகையில் படுக்கலாம், வெல்வெட்டுக் கம்பளத்தில் நடக்கலாம், என்ற மோகவலை வீசப்படும். துறவியைப் போல பேசி தூர நிற்பான். இலட்சிய வா வாதி. காயமே இது பொய்யடா-காற்றடைத்த பையடா என்ற 'நீர்மேற்குமிழி பஜனை' நடத்திக்காட்டப்படும். கண்மூடிகளிடம் காட்டப்பா உன் கைவரிசையை எனக்கேலி செய்வான் எச்சரிக்கை.அபாய அறிவிப்பு - உடனடி நடவடிக்கை - பாகு மொழி -பாசாங்கு வேலை இத்தனை உருவங்களில் அழிவு அவனை அண்ட வரு கிறது. ஆனால் அந்த இலட்சிய வீரன் தன் பாதை, யிலேயே போகிறான்-போகிறான்-போய்க் கொண்டே இருக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/18&oldid=1701814" இலிருந்து மீள்விக்கப்பட்டது