உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சிரிப்பைப் பார் எனக்கூறும் மூதாட்டிக்கும் தோழரின் கட்டுரைக்கும் முரண்பாடிருப்பதாக எனக்குத் தெரிய வில்லை. குட்டையின் நாற்றத்தை அகற்ற அத்தரும் ஜவ்வாதும் போடு எனக் கூறுகிறவரின் வரிசையில் கூட தோழர் இடம் பெறாதது வருந்தத் தக்கது. திரிக்கும் வெறி கலை யுலகில் இடம்பெறக் கூடாது என தோழர் கூறுவதிலிருந்து நாற்றக் குட்டையில் வாசனைப் பொருள் கலப்பவரின் வரிசை யில்கூட நிற்கமுடியாமல் வழுக்கிவிழுந்து டி. கே. சிதம்பரநாதர்களின் மேலும் சீறிப் பாய்கிறார் என்பது விளங்குகிறது. எரிக்கும் வெறி என எழுதியதால் சுயமரியாதை இயக்கத்திற்கு சூடு கொடுத்துவிட்டதாக அன்பர் சொல்லிக் கொள்ளலாம். அழகப்பாவின் ‘அப்ளாசை’ யும் பெற்றிருக்கலாம். கையிலிருப்பது பேனா என்பது கூட தெரியாமல் கலை போதையில் கிறுக்கியிருக்கிறார் ஆசிரியர் ! இல் கம்பராமாயணத்தைக் கொளுத்துவதா? லையா ? என்ற சொற்போரில் அறிஞர் அண்ணாதுரையை எதிர்த்து மேடையில் நிற்கமுடியாமல் சேதுப்பிள்ளைக் குத் தலைவலியும், சோமசுந்தர பாரதியாருக்கு பிரயாண அவசரமும் ஏற்பட்டதை இந்தக்க லைக் காதலர் மறந்துவிட்டது மாபெரும் ஆச்சரியம். "அவரவர் நிலைக்கு ஏற்ப அமைந்ததோர் அழகுக் கோலம் தாங்குவது கலை ' எனக் கூறுகிற ஆசிரியர். கொள்ளைக்காரன் கொள்ளையடிக்கும் தொழிலைக் கலையாகக் கொள்வதையும், விபசாரி... வாலிபர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/23&oldid=1701819" இலிருந்து மீள்விக்கப்பட்டது