உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய 30-1-1948 இந்திய உப கண்டத்தின் வரலாற்றில் இரத்தக் கரை படிந்த நாள். மக்கள் உகுத்த இரத்தக் கண் ணீர் அருவி யென ஒடி அரபிக் கடலில் கலந்து...வங் களாக் குடாக்கடலில் "வழிந்தோட காந்தி மாண். டாரா?" என்ற கேள்விக்கு முன் கிளம்பிய பெரு மூச்சு இமயத்தை அசைக்க-இப்படி ஒரு சோக பூகம் பம் 30-1-48-ல்! உத்தமர் காந்தியார் சுடப்பட்டார்! மும்முறை சுடப்பட்டார் ! ஐயகோ! சுடப்பட்டார்! பிரார்த்தனைக் குத்தான் வந்தாராம்......வேலும் வாளும் ஏந்தி வேற் றார்படை எங்கே என்று அவர் அதட்டலாக கேட்ட நேரத்தில் அல்ல !... அன்பு தவழும் மொழிகளில் பிரார்த்தனைக்கு மக்கள் வந்துவிட்டனரா என்று வினவிய நேரத்தில்.... சுடப்பட்டார் ! கனல் கக்கும் கண்களோடு...கட்டாரியை எறிந்த காட்டானையைப் போல் எதிரியின்மேல் மோதிய வேளையில் அல்ல- கருணை பொங்கும் கண்களால் தன் உபதேசங்கேட்க. வந்திருந்த மக்களைக் கண்டானந்தித்த வேளையில்...... சுடப்பட்டார் ! சுடப்பட்டார்....சுடப்பட்டார் சுக்குநூறாக்கம் பட்டார்!...... •

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/39&oldid=1701843" இலிருந்து மீள்விக்கப்பட்டது