உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அய்யருக்குத் திருவையாறே 'ரகளை'ப் படுகிறது. தஞ்சை மாவட்டம் தமிழர்கள் உலவும் சோலை. ஒரு சாகித்ய கர்த்தாவுக்கு-தமிழ்க்கலைஞர்கட்கு மதிப்பு கொடுக்காத திருவையாற்று 'திருவிழாவிலே புகழ் மாலை! வெட்கக்கேடு. தமிழ் இசைத்தால் மேடை தீட்டாகி விடுகிறதென கூறினார் ஒரு அய்யங்கார் பாடகர் சில ஆண்டுகட்கு முன்பு, திருவையாற்றில்! அந்த எதிர்ப்புக்கு ஆளான பெரும் இசைவாணர் இந்த ஆண்டு திரும்பவும் திருவையாற்றுக் காலிலே விழுந்தார். தமிழரவர். தலைகுனிகிறது தமிழ்நாடு. ஏனென்று கேட்டால் திருவையாற்றிலே நாலைந்து நாள் கொண்டாட்டங்களிலே கலந்து கொண்டால் தான் விளம்பரமாகிறதெனக் கூறுகிறார்கள் பதிலாக! அந்த நிலையை மாற்றுவோம். அறிவு முழக்கம் செய்வோம். தமிழர் நெஞ்சை பகுத்தறிவுக்கோட்டை யாக அமைப்போம். திருவிடத்தார் திறனுடையார் எனப் பறை சாற்றுவோம். பாரதிதாசனின் விழா அதற்குப் பயன்பட வேண்டுமென்பதே என் ஆசை. ஆண்டுக்கொரு முறை மாவட்டத் தலைநகர்களிலே பாரதிதாசன் விழா மூன்று நான்கு நாட்கள். அங்கே. கலைமலர்கள் வாரியிறைக்கப்பட வேண்டும். அவை தமிழர் வாழ்விலே மணம் பரப்ப வேண் டும். புரட்சிக் கவிஞரைப்போற்ற நாடெங்கும் நல்ல வர்கள் தோன்ற வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/9&oldid=1701801" இலிருந்து மீள்விக்கப்பட்டது