பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

19 வாய்ந்ததாகும். ஏனென்றால், போரை ஒழிக்க வேண்டும் என்பதைக் கொள்கையளவிலாவது ஏற்றுக் கொள்ள உறுப்பு: நாடுகள் ஆய்த்தமாக இருப்பதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது. ". மனப்பூர்வமான உணர்வு இல்லாமை, வல்லரசு மண்ட லங்களின் செல்வாக்கு, உறுதியின்மை, உறுதி கொள்வதில் காலதாமதம் ஆகியவை இந்த முறையைக் குலைத்துப்போர் மூளச் செய்கின்றன. ஆனால், ஐ.நா. வலுப்படுத்தப்படுமே யானால் உலக மக்கள் அனைவரும் அதன் நன்னெறிகளுக்குப் நிற்பார்களேயானால் அமைதிக்காகப் பக்கபலமாக போராடுமாறு தங்கள் நாடுகளை வற்புறுத்துவார்களே யானால், இதனால் ஏற்படக்கூடிய விபரீத விளைவுகளைப் பெரு. மளவு குறைக்க முடியும். ஐ.நா.வை வலுப்படுத்தி அதற்குப் பக்கபலமாக நிற்கு. மாறு ஒவ்வொருவருக்கும் வேண்டுகோள் விடுப்பதற்காகவே இன்றைய தினத்தைக் கொண்டாடுகிறோம். மதிப்புக்குரிய டாக்டர் ராதாகிருஷ்ணன் சுட்டிக் காட்டியிருப்பதைப் போல "புதிதாய் உருவாகிவரும் உலக சமுதாயத்திற்கு. ஆத்மாவை, மனச்சாட்சியைக் கொடுக்க முடியும் என்று" ஐ.நா.நம்புகிறது. ஆனால், ஐ,நா, ஸ்தாபனம் போரைத் தடுத்து அநீதியை' ஒழிக்கும் திறமையுள்ள ஸ்தாபனமாக மாறவேண்டு மென்றால், ஒரு தடவை லுட்ரோ வில்சன் குறிப்பிட்டுள்ளது போல அது இமைப்பொழுதும் உறங்காத கண்ணாக இருக்க வேண்டும்; எங்கும் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்கும் கண்ணாகத் திகழ வேண்டும். ஐ.நா. ஸ்தாபனம் வலிமையற்றது. ஆதலால் அதைப் பராமரிக்க வேண்டாம் என்று வாதாடுவது, அந்தக் கண்ணை, யும் குருடாக்குவதற்கு ஒப்பாகும். பிறகு இருளில் அலைந்து திரிந்து அழிவைத்தான் வரவேற்க வேண்டியிருக்கும்.