பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

33.. தருகின்றனர் - ஏன் இந்தத் தாமதம் என்ற கணை தொடுக்க: மட்டுந்தானா?- எவரும் அதுபோல் கூறார். உம்மிடம் மிகுதியான நம்பிக்கை கொண்டுள்ளோரில் நானும் ஒருவன். புதியதோர் உலகு செய்வோம் - என்று பாடிச் சென்ற பாவலர்-உம் போன்றோரை மனதுட் கொண்டே பாடினார். உம்மிடமின்றி வேறு எவரிடம் தூய தொண்டாற்றும் திறனை எதிர்பார்க்க முடியும்? மாணவர்களுக்குக் குறிக்கோள் தெளிவாக அமையவேண்டும்! குறிக்கோள் தெளிவாக அமைந்திடின் மாணவர்களிடம் மாண்புமிகு செயலினை எதிர்பார்க்க முடியும் என்றுரைத் தேன். இந்தக் குறிக்கோளை மாணவர் பெற்றிடத்தக்க விதத்தில் பாடத் திட்டமும் - பயிற்சி முறையும் - பழகு முறையும் கல்விக் கூடங்களில் அமைந்திட வேண்டும். கல்விக் கூடங்களின் எண்ணிக்கை பெருகி அரசுகளின் வருவாய்த்துறை அதற்கேற்ப அமையாதிருக்கும் நிலையில் கல்விக்கூடங்கள் எவ்விதமான சூழ்நிலையில் இயங்க வேண்டுமோ அவ்விதம் இருந்திடச் செய்வதும் இயலாத தாக உள்ளது. படிப்படியாக இந்நிலையிலே செம்மைப்படுத்த அரசு முனைந்து பணியாற்றி வருகின்றது. ஆண்டு பல ஆகக்கூடும், அடிப்படைத் தேவைகளையேனும் அளித்திட முடிவதற்கு! அதற்கே பொருள் ஈந்திட வேண்டியுள்ளது. அதுவும். எந்நிலையில் இப்பொருளைப் பெறுகின்றோம் தருகின்றோம் என்பதனை எண்ணிப் பார்த்திட வேண்டும். முழுவயிறு காணாதோர், முதுகெலும்பு முறியப் பாடு படுவோர், வாழ்வின் சுவை காணார், வலியோரின் பகடைச்