பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

காக்கும் கரங்கள் நமது பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவளிக்கும். திட்டத்துக்கு அமெரிக்க அற நிறுவனமான கேர்' அளித்து வருகிற உதவியை நான் மதித்து. வரவேற்கிறேன். நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நல்லுறவு பல மடைந்து அதன் விளைவாக பல தொழிற் கூடங்களும் மருத் துவமனைகளும் ஏற்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். கல்வித் துறைக்கும் அவர்களது உதவியால் நல்ல ஊக்கம் அளித்து வருகிறார்கள். இந்த நல்ல நாளும், தடக்கின்ற நிகழ்ச்சிகளும் அத்தகை நல்ல கருத்துக்களை நம் மனதில் உண்டாக்கட்டும். நலிந்தோருக்கு உதவுவது என்ற பொது நலத் தத்துவத் தினடிப்படையில் அமெரிக்கர்கள் இந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள். ஒரு பக்கத்திலே நலிவும் மறு பக்கத்திலே வளமும் என்ற நிலைஇருக்குமானால் அது உலகம் முழுவதும் பரவும். தாம் இங்கேதிரைப்படங்களுக்கும் "காக்கும் கரங்கள் என்று பெயரிடுகிறோம். அமெரிக்க மக்கள் தங்களது கரங் களைக் காக்கும் கரங்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குமுமனதாகத் தங்கள் கரங்களை வலிவுள்ள கரங்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்,