பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

நூல்கள் இன்னும் தேவை உலகத்தமிழர் மாநாட்டிற்கு வந்த தமிழ்ப்பற்று கொண்ட தமிழன்பர்களுக்குத் திருவாரூர் தியாகராசன் இங்கு ஒரு அரிய விருந்து கொடுத்தார். அதே திருவாரூரைச் சார்ந்த தம்பி கருணாநிதி எழுதிய சிலப்பதிகார நாடகக் காப்பிய வெளியீட்டு விழாவும் இங்கே நடைபெறுகிறது. கருணாநிதி பேசும்போது நாங்கள் இருவரும் திருவாரூ ரைச் சார்ந்தவர்கள் என்று கூறினார். நம்முடைய நண்பர் பக்தவத்சலம் அவர்கள் தானும் சேர்ந்து கொள்ளவேண்டுமென்று நான் பெண்ணெடுத்தது திருவாரூர் என்று சொல்லித் தாமும் திருவாரூரைச் சார்ந்த, வர் என்று கூறிக்கொண்டார். அவர் வேறு ஒன்று கூறுவார் என்று எதிர்பார்த்தேன். தியாகராசனும் கருணாநிதியும் திருவாரூர் என்று கூறியது போல் - விழாவுக்குத் தலைமை தாங்குகின்ற அவரும் நானும் தொண்டைமண்டலத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறுவார். என எதிர்பார்த்தேன். திருவாரூரிலும் தஞ்சையிலும் பிற பகுதிகளிலும் இருக்கும் தியாகராசன் போன்றவர்கள் தொண்டை மண்டலத்திலிருந்து சென்றவர்கள்தான். நெடுங்காலத்திற்கு முன்பே அவர்கள் சென்றதால் பந்தங் கள் அறுபட்டிருக்கலாம். ஆனால் இப்படிப் பலரைத் தொண்டை மண்டலம் அனுப்பிக் கொடுத்திருக்கிறது என்ப தும் சோழ நாடு பலரை இங்கு அனுப்பிக் கொடுத்திருக்கு கிறது என்பதும் தமிழ் நாட்டினுடைய வரலாறாக இருந் திருக்கிறது.